நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து காற்றாலை நிறுவனத்தின் மின்கம்பங்கள்; கோட்டாட்சியரிடம் தேமுதிக புகார்
கொவிலப்ட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியை தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- எட்டயாபுரம் தாலுகா மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலிவாடுநாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர்கள் விவசாயம் செய்ய செல்லும் வழியில் உள்ள நிலம் நீர் வழி ஓடை மற்றும் மாட்டு வண்டிப்பாதைகளை ஆக்கிரமித்து ஒரு காற்றாலை நிறுவனம் தற்போது ஒப்பந்ததாரர்கள் மூலமாக இரட்டைமின் கம்பங்கள் மற்றும் ஒற்றை மின் கம்பங்கள் நீர் வழி ஓடையின் நடுப்பகுதியில் நிறுவி இருக்கிறார்கள். […]