• May 20, 2024

Month: September 2023

செய்திகள்

பா.ஜனதா குறித்து கருத்து தெரிவிக்க அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தடை

பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க. நேற்று முன்தினம் முறித்துக்கொண்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திலேயே கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதாவது, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள், ஒரு சில நிர்வாகிகளை தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா உடனான மோதல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பூவணநாத சுவாமி கோவிலில் தங்க கொடிமரங்கள் ; அறங்காவலர் குழு கூட்டத்தில்

கோவில்பட்டி பூவணநாதசுவாமி கோவிலில் புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்டு பதவி ஏற்ற அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு தலைமையில் அறங்காவலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அறங்காவலர்கள்  சுபாஷ், கை.சண்முகராஜ், பூ.சு.திருப்பதிராஜன், செ.ரவீந்திரன், தி. நிருத்தியலட்சுமி  மற்றும் கோவில் செயல் அலுவலர் கி.வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கோவிலின் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள்  நிறைவடைய உள்ள நிலையில் தொல்லியல் துறையின் கருத்துரு பெற்று திருப்பணிகள் செய்யவும், அம்பாள் மற்றும் சுவாமி சன்னதி கொடிமரங்களை தங்க கொடிமரங்களாக மாற்றும் செய்து 2024 […]

தூத்துக்குடி

திருக்குறள்  ஒப்பித்தல் போட்டி; மாணவர்கள் அக்டோபர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-  தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,330 திருக்குறளையும் ஒப்பிக்கும் மாணவா்-மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவா்-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் போட்டியில் பங்கேற்போா், திறனறிக் குழு உறுப்பினா்களால் தெரிவு செய்யப்பட்டு பரிசுக்குப் பரிந்துரை செய்யப்படுவா். மாணவா்கள் 1330 குறள்களையும் ஒப்பிக்கும் திறன் பெற்றவா்களாக இருப்பதோடு, குறளின் பொருளையும் அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக […]

செய்திகள்

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி முறிவு பற்றி அமைச்சர் துரைமுருகன் கருத்து

சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும். காவிரி […]

தூத்துக்குடி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி சையது முகமது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய  SSC CGL Tier-1 தேர்வுக்கான   முடிவுகள் 19.9.23 அன்று வெளியாகி உள்ளது. மேலும் SSC MTS Havildhar  தேர்வுக்கான முடிவுகளும் 2.9.23 அன்று வெளியாகி உள்ளது. மேற்படி தேர்வுகளில் தூத்துக்குடி            மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.&

தூத்துக்குடி

விறகு கட்டையால் அடித்து நண்பரை கொன்றவர் கைது

தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் லட்சுமனன் மகன் அழகர் (வயது 38). இவர் ரெடிமேட் ஆடைகள் விற்பனை தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (43). இவர் புதியம்புத்தூரில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நண்பர்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் காமராஜ் நகரில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றனர்.  அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த […]

கோவில்பட்டி

`வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிற்கும்’ என்ற அறிவிப்பு கண்டிப்பாக வரும்; ஆர்ப்பாட்டத்தில்

சென்னை – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ விரைவு ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று மாலை மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பஸ் நிலையம் எதிரே பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமை தாங்கி  பேசியதாவது:-  கோவில்பட்டி மிகப்பெரிய வணிக நகரம். எதிர்காலத்தில் மாவட்டமாக உருவாகும் போது அதன் தலைநகராகவும் கோவில்பட்டி இருக்கப் போகிறது. இவ்வளவு முக்கியமான, மையப்பகுதியில் உள்ள கோவில்பட்டி நகரை […]

கோவில்பட்டி

சாலை வசதி கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டியை அடுத்த  இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட மறவர் காலனி மேட்டு தெருவில் இரு பக்கமும் சாலை மிகவும் குண்டு குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இந்த சாலையை உடனடியாக செப்பனிட்டு தர வேண்டும், இப்பகுதியில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்பகுதியில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் நூறுநாள் வேலை அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு […]

கோவில்பட்டி

வீட்டு மாடியில் தூங்கியவர்  கீழே விழுந்து  பரிதாப சாவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் சேர்மராஜ் (வயது 32). தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள பால்கனியில் தூங்க சென்ற இவா் நேற்று காலை பாா்த்தபோது மாடியில் காணவில்லை.இரு வீடுகளுக்கிடையே உள்ள சந்தில் விழுந்தது தெரிய வந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர்.மீட்டனர்.. […]

கோவில்பட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:-  தூத்துக்குடி மாவட்டத்தில் 42,727 மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மத்திய அரசின் தேசிய அடையாள அட்டை 21,337 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய […]