சர்வதேச புலிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. புலிகளின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கமாகும். கோவில்பட்டியில் சில பள்ளிகளில் இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி ஐ.சி.எம். நடுநிலைப்பள்ளி சார்பில் சர்வதேச புலிகள் தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புலி வேடம் அணிந்து புலிகள் வாழ்வதற்கு தேவையான வாழ்விடங்களை உருவாக்கிடவும்,இயற்கை வளங்களையும்,சுற்றுச்சூழலை […]
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ என்றும், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் கிடைக்கும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். ஆடி மாதம் பிறந்தாலே அனைத்து பண்டிகைகளையும் அழைத்து கொண்டு […]
பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டில் ஏதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் அது வெளியே ஓடி விடும். துர்தேவதை போன்ற தீய சக்திகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் ஒரு வேளை வந்து விடலாம். தினமும் மணி அடிப்பதால் அந்த மணியோசை, […]
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டநத்தம் கிராமத்தில் அக்கம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று, அம்மன் கழுத்தில் கிடந்த தாலி செயின், கண் மலர், மூக்குத்தி ஆகியவற்றை திருடி சென்று விட்டார்கள். இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணியன் (41) என்பவர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பெயரில் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த […]
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக \ வயது மற்றும் எடை பிரிவு வாரியாக போட்டிகள் நடந்தன. இதில் கோவில்பட்டி கஸ்தூரிபா பள்ளி, புதுப்பட்டி அரசு தொடக்க பள்ளி, பிருந்தாவன் பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சிலம்ப வீரர்கள் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பாக கலந்து கொண்டனர், இந்த போட்டியில் அருண்குமார் , […]
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்;ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடுமாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12.8.2023 காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மற்றும் மீன்வளம்–மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் […]
தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 16வது தங்கத்தேர் திருவிழா) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 5-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான 29.7.2023, 30.7.2023, 3.08.2023, 4.08.2023 மற்றும் 5.08.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 10 இடங்களில் வாகன நிறுத்தும் (Parking) வசதி […]
கோவில்பட்டி இலுப்பையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சண்முக நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேமபாட்டு நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், கவுன்சிலர்கள் […]
80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்ககலைக்கழகம் நிறுத்தி வைப்பு
தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த 80 பொறியியல் கல்லூரிகளை நேரில் ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. உள்கட்டமைப்பு வசதியின்றி செயல்படும் கல்லூரிகள் உடனடியாக அவற்றை சரி செய்ய அண்ணா பல்கலைக்கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் மாணவர்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, ஆய்வகங்கள், நூலகம் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே அங்கீகாரம் […]
ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.இதை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. மாலையில், கோவில் யானையின் உடல் முழுவதும் மாவு […]