சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியாக \ வயது மற்றும் எடை பிரிவு வாரியாக போட்டிகள் நடந்தன.
இதில் கோவில்பட்டி கஸ்தூரிபா பள்ளி, புதுப்பட்டி அரசு தொடக்க பள்ளி, பிருந்தாவன் பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சிலம்ப வீரர்கள் அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளியின் சார்பாக கலந்து கொண்டனர்,
இந்த போட்டியில் அருண்குமார் , அறி கிருஷணன், ஆனந்தலட்சுமி, வெற்றி வேல் ஆகியோர் முதலிடமும், அம்பரிஸ் இரண்டாம் இடமும், மாணிக்கராஜா, முகில்குமார் ஆகியோர் மூன்றாம் இடமும் பிடித்தனர்,
இவர்கள் கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்தும் பாராட்டும் பெற்றனர். அப்போது கவுன்சிலர் ஜோதிபாசு, புதுப்பட்டி அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்று,ம் காசி மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.