சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதில் அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் டி.ஜெயக்குமார்,அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். […]
தென்காசி, தூத்துக்குடியில் 4 நாட்கள் சீமான் சுற்றுப்பயணம்; கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் 19-ந்தேதி பேசுகிறார்
தென்காசி, தூத்துக்குடியில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டு தொகுதி கலந்தாய்வு கூட்டத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்துகிறார். வருகிற 16-ந்தேதி காலை 1௦ மணிக்கு தென்காசியில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,கடையநல்லூர் தொகுதி நிவாகிகள் கலந்தாய்வு நடக்கிறது, இரவில் தென்காசியில் தங்குகிறார்,. 17-ந் தேதி காலை 10 மணிக்கு தென்காசி, ஆலங்குளம் தொகுதிகள் கலந்தாய்வு நடக்கிறது. அன்று மாலையில் தென்காசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சீமான் பேசுகிறார். இரவில் திருநெல்வேலியில் தங்குகிறார். 18-ந் தேதி காலை […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-‘ ,தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 9 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 1030 மணி அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ. ஐ.டி.ஐ. டிரைவர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி கல்வித் […]
தூத்துக்குடி தொகுதிக்கு கனிமொழி செய்துள்ள சாதனைகள் ஏராளம்; அமைச்சர் கீதா ஜீவன் புகழாரம்
தூத்துக்குடி சிதம்பரம் நகர் மெயின் ரோட்டில் திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பிரையண்ட் நகர் பகுதி திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தங்கினார்,. இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஆனந்த கபரியேல்ராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-‘ தமிழக முதலமைச்சர் தளபதியாளரின் திராவிட மாடல் ஆட்சியில் சமூகநீதி, சமத்துவம், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழ்நாடு வளர்ச்சி […]
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஸ்ரமுத்துமாரியம்மன், ஸ்ரகருப்பசாமி கோயில் கொடை விழா கடந்த மே 30ம்தேதி கணபதி ஹோமம் மற்றும் நாட்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 3ம்தேதி இரவு 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 4ம்தேதி இரவு 7 மணிக்கு தேவர் திருமகனார் இளைஞரணியின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 5ம்தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் மற்றும் ஊர் விளையாடுதல் […]
கமிஷன் கேட்கும் அதிகாரிகள்: எட்டயபுரம் தாசில்தாரிடம் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர்
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தாலுகா சிதம்பராபுரம் கிராமத்தில் செல்வமோகன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது ஆலையின் பெயருக்கு முன்பு ஓம் என்ற எழுத்தை சேர்த்து சிறிய மாற்றம் செய்ய இருப்பதால் அதற்கு அனுமதி கேட்டு செல்வமோகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 25.4.2023 விண்ணப்பம் செய்தார். இதையெடுத்து பெயர் மாற்ற அனுமதிக்காக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அந்த விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் நூற்றாண்டு நிறைவு விழா; 10, 11-ந் தேதிகளில் நடக்கிறது
தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டம் கடந்த 1923-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி திருச்சி மறைமாவட்டத்தில் இருந்து பிரித்து தூத்துக்குடி மறைமாவட்டம் தனியாக உருவானது. இந்த மறைமாவட்டத்தின் முதல் ஆயராக பிரான்சிஸ் திபுர்டியஸ் ரோச் பொறுப்பேற்றார். தற்போது 7- வது பிஷப்பாக ஸ்டீபன் அந்தோணி பணியாற்றி வருகிறார். இந்த மறைமாவட்டம் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் 120 பங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் […]
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தினசரி பயணம் மேற்கொள்ளும் சுமார் 60 ஆயிரம் பயணிகளில், 20 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இருக்கை முன்பதிவு வசதியினை அரசு பஸ்களில் 200 கி.மீ. மற்றும் அதற்கு மேற்பட்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு விரிவுப்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. *கோயம்புத்தூரிலிருந்து திருவண்ணாமலை *சேலத்திலிருந்து, பெங்களூரு காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர் *ஈரோட்டிலிருந்து, பெங்களூரு, குமுளி, மைசூரு, புதுச்சேரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர்* *ஓசூரிலிருந்து, சென்னை கடலூர், […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் பெற்றிருந்தால், பிளஸ் 1ல், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்க வேண்டும்’ என, தலைமை ஆசிரியர்களை, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சில அரசு பள்ளிகளில், மாணவ – மாணவியர், முக்கிய பாடங்களில் தேவையான மதிப்பெண் பெற்றும், பிளஸ்-2 வகுப்பில், அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு தொகுப்புகளில் இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புகார்கள் சென்றுள்ளன. அதேபோல,14417 என்ற உதவி எண்ணுக்கும், மாணவர்கள், பெற்றோர் தரப்பில் குறைகளை […]
ஜே.சி.ஐ.அமைப்பின் துணை அமைப்பாக ஜே.காம். விளங்குகிறது. தொழில் முனைவோர் முன்னேற்றம் காணும் வகையில் உருவான இந்த அமைப்பு கோவில்பட்டியில் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான முயற்சியில் ஜே.சி.ஐ.தலைவர் தீபன்ராஜ் ஈடுபட்டார். அதன்படி ஜே.காம் உருவாகி தொழில் முனைவோரின் 5 மாதிரி சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன, வெற்றிகரமாக இந்த கூட்டம் நடந்து முடிந்ததையொட்டி இன்று கோவில்பட்டியில் ஜே.காம் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா பைபாஸ் சாலையில் உள்ள கணேஷ் பேக்கரி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவுக்காக கோவில்பட்டி […]