மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் வர உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை அண்மையில் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் மாநிலத் […]
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும். நிலையான கால நிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு :- தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும். இத்திட்டம் மூலம் தற்போது […]
தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரான கோவில்பட்டியை சேர்ந்த கா.மகேந்திரன், தெற்கு ரெயில்வே மேலாளருக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:- மதுரை கோட்டத்தில் திருநெல்வேலிக்கு அடுத்து வருமானம் அதிகமாக ஈட்டித்தரும் ரெயில் நிலையம் கோவில்பட்டி ரெயில்நிலையம ஆகும். கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் விவசாயத்தை நம்பி அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக வர்த்தக ரீதியாக ரெயில்வே போக்குவரத்தை நம்பி உள்ளனர். கோவில்பட்டி ரெயில் நிலையம் ஏ கிரேடு […]
கோவில்பட்டி ஊராட்சி ஒள்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடர்பாக மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சி முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) அ.தனலட்சுமி பேசுகையில், மைய பொறுப்பாளர்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவு சமைப்பது போல் சமைத்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், […]
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு சந்தீப் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு 12 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த வீடுகளுக்கு செல்வதற்கு போதிய சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் கரடுமுரடான பாதையில் தவழ்ந்து மிகவும் சிரமத்துடன் வீடுகளுக்கு செல்கின்றனர்.மேலும், அங்கு குடிநீர் வசதியும் இல்லாத நிலையில், கோடை காலம் என்பதால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் வீடுககளுக்கு செல்வதற்கு வசதியாக சாலை வசதியும், நிரந்தரமாக குடிநீர் வசதியும் செய்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1600 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.12.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன […]
தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர் ககன்தீப்சிங்பேடி. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டார். துணை ஆணையராக ஐ.ஏ.எஸ்.அதிகாரியான மனிஷ் நரனவாரே, நியமிக்கப்பட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மனிஷ் நரனவாரே ஈரோடு கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். . இது தொடர்பாக அவர் […]
கோவில்பட்டி அருகே உள்ள காலங்கரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கனகலட்சுமி, துணைத் தலைவராக கெச்சிலாபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த சுந்தரலட்சுமி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தபோது தனக்கென ஒதுக்கப்பட்ட துணை தலைவரின் நாற்காலி சேதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் , வேண்டுமென்றே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இப்படி செய்ததாகவும் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி துணைத் தலைவர் புகார் கூறினார். மேலும் தனக்கான இருக்கை […]
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு; 55 மாணவர்கள் சேர்ந்தனர்
கோவில்பட்டி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்படிப்பு இருபருவங்களாக நடத்தப்பட்டு ஓராண்டில் முடிக்கப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து 55 மாணவர்கள் பட்டயப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இப்பட்டயப்படிப்பிற்கான தொடக்கவிழா கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (7.6.2023) நடத்தப்பட்டது. வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் முனைவர். சோ. மனோகரன், வரவேற்றார். தொடர்ந்து தொலைதூரக் கல்வி இயக்குனரகம் இயக்குனர் முனைவர். பி. […]