கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் 7 ரெயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்ககோரி மனு
தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினரான கோவில்பட்டியை சேர்ந்த கா.மகேந்திரன், தெற்கு ரெயில்வே மேலாளருக்கு அனுப்பி இருக்கும் கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை கோட்டத்தில் திருநெல்வேலிக்கு அடுத்து வருமானம் அதிகமாக ஈட்டித்தரும் ரெயில் நிலையம் கோவில்பட்டி ரெயில்நிலையம ஆகும்.
கோவில்பட்டி சுற்று வட்டாரத்தில் விவசாயத்தை நம்பி அதிகம் பேர் வசித்து வருகிறார்கள். வியாபாரிகள் தொழில் சம்பந்தமாக
வர்த்தக ரீதியாக ரெயில்வே போக்குவரத்தை நம்பி உள்ளனர். கோவில்பட்டி ரெயில் நிலையம் ஏ கிரேடு
வகுப்பில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வருவாயை ரெரயில்வேக்கு ஈட்டி தருகிறது.
கொரோனா காலகட்டத்தில் சில ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்றன. மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கிய போதும் கொரோனா காலத்துக்கு முன்பு நின்று சென்ற ரெயில்கள் தற்போது நிற்காமல் செல்கின்றன, இதனால் இந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனகே பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரெயில்களின் விவரங்களை தெரிவித்துள்ளேன். அந்த ரெயில்களின் எண் மற்றும் பெயர் விவரம் வருமாறு:-
தினசரி ரெயில்கள் :
1 . மதுரை – புனலூர்
( 16729 / 16730 )
2 . சென்னை – கன்னியாகுமரி
( 12633 )
வாராந்திர ரெயில்கள்
3 . கன்னியாகுமாரி – ராமேஸ்வரம்
( 22621 – 22622 )
4 . டெல்லி நிஜாமுதீன் – கன்னியாகுமாரி
( 12642 )
5 . ஓகா – தூத்துக்குடி
( 19568 )
6 . நாகர்கோவில் – சென்னை எழும்பூர்
( 12667 – 12668 )
7 . செங்கோட்டை – சென்னை எழும்பூர்
( 20683 – 20684 )
மேலும், கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் அடிப்படை வசதியான கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருக்கிறது, ரெயில் பெட்டிகள் நிற்கும் இடம் (கோச் பொசிசன்) தெரியவில்லை. முதியோர்களை அழைத்து செல்லும் பேட்டரி வாகனம் போன்ற வசதிகள் இல்லை. எனவே உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவின் நகல்கள் கனிமொழி எம்.பி. மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது,