அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி
![அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி](https://tn96news.com/wp-content/uploads/2023/06/2bc9f64b-3cd3-4f98-af41-c9268a3adb3a-850x560.jpeg)
கோவில்பட்டி ஊராட்சி ஒள்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் தொடர்பாக மைய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சி முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) அ.தனலட்சுமி பேசுகையில், மைய பொறுப்பாளர்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவு சமைப்பது போல் சமைத்து இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், காலை உணவு திட்டம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் செ.சங்கர் நன்றி கூறினார்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/c99c386d-6686-4067-952d-10e7a8934554-1024x682.jpg)
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)