கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு; 55 மாணவர்கள் சேர்ந்தனர்
கோவில்பட்டி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பட்டயப்படிப்பு இருபருவங்களாக நடத்தப்பட்டு ஓராண்டில் முடிக்கப்படும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலிருந்து 55 மாணவர்கள் பட்டயப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இப்பட்டயப்படிப்பிற்கான தொடக்கவிழா கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (7.6.2023)
நடத்தப்பட்டது. வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பேராசிரியர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் முனைவர். சோ. மனோகரன், வரவேற்றார். தொடர்ந்து
தொலைதூரக் கல்வி இயக்குனரகம் இயக்குனர் முனைவர். பி. பாலசுப்பிரமணியம்,
வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு பற்றிய முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
தொலைதூரக்கல்வி இயக்குனரக பேராசிரியர் முனைவர். சந்திரசேகரன், வேளாண் பட்டயப்படிப்பின் பயிற்சி முறைகள்
மற்றும் வகுப்புகள் எடுக்கப்படும் முறை மற்றும் இப்பட்டயப்படிப்பின் பயன்பாடு குறித்து விளக்கமளித்தார். அடுத்ததாக, கோவில்பட்டி வட்டார இடுபொருள் விற்பனை மைய சங்கத்தலைவர் வெங்கடேஷ் வாழ்த்துரை வழங்கினார். இப்பட்டயப்படிப்பில் சேர்ந்தோரிடம் கலந்துரையாடல் நடந்தது. தொடர்ந்து பேராசிரியர்கள் முனைவர். ஆனந்தி
முனைவர். புவனேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் உதவி பேராசிரியர் . வி. சஞ்சீவ்குமார், நன்றி கூறினார்,