Month: May 2023

செய்திகள்

கிராம ஊராட்சிகள் பொதுமக்களிடம் இருந்து எந்த சேவைக்கும் ரொக்கமாக பணம் பெறக்கூடாது; ஆன்லைனில்

கிராம ஊராட்சிகளில் புதிய கட்டிடத்திற்கான அனுமதி இன்று முதல் இணையதளம் மூலம் வழங்கப்படும். புதிய கட்டிடங்களுக்கு அனுமதி பெற *onlineppa.tn.gov.in* என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் எந்தவொரு சேவைக்கும் கட்டணத்தை இணையம் மூலமே பெற வேண்டும். கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரிகளை *tnrd.tn.gov.in* என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று செலுத்தலாம். அதேபோல், […]

செய்திகள்

ம.தி.மு.க.தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல்; வேட்புமனுதாக்கல் ஜூன் 1-ந் தேதி  தொடக்கம்

ம.தி.மு.க.போதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கீழ்க்காணும் பொறுப்புகளுக்கான தேர்தல் 14.6.2023 சென்னை – அண்ணா நகர், 3-வது அவென்யூ – புதிய ஆவடி சாலை சந்திப்பில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் நடைபெறும். இதனை முன்னிட்டு, 2023 ஜூன் 1 ஆம் நாள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற இருக்கிறது. தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் கபடி போட்டி

கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஏ.எம்.சி.ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் 4வது ஆண்டு  கபடி போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. போட்டியில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன, மின்னொளி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை காண கிராம மக்கள் திரண்டு வந்திருந்தனர். இந்த போட்டியில் திருவந்தம்பட்டி மகேஸ்வரன் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது. கூசாலிபட்டி ஏ.எம்.சி.அணி 2-வது இடத்தையும் , தாமஸ் நகர் மதன் அணி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா

கோவில்பட்டி சவுபாக்யா திருமண மஹாலில் இன்டர்நேஷனல் சிலம்பாட்ட சாலை சார்பில் மாவட்ட சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு 2ம்  ஆண்டு கச்சை கட்டும் விழா நடைபெற்றது. சிலம்பாட்ட பயிற்சியாளர் சோலை நாராயணசாமி தலைமையில் தேசிய நடுவர் பாண்டியன், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான பெல்ட்கள் தேர்வு செய்தார். சிறப்பு  அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிலம்ப கலையை ஆர்வமுடன் கற்றுக்கொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு கச்சையை கட்டி விட்டு சிலம்பம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி : சென்னை, டெல்லி அணிகள் வெற்றி

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் 8ம் தேதி முதல் நடந்து வருகின்றன.கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாளான இன்றுன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில்தமிழ்நாடு போலீஸ் சென்னை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் பெங்களூரு அணிகள் மோதின .இதில் 3:2 என்ற கோல் கணக்கில் சென்னை, தமிழ்நாடு போலீஸ் அணி […]

கோவில்பட்டி

பிரேமலதா 28 -ந் தேதி கோவில்பட்டி வருகை : தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வருகிற 28ஆம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதையும் தொடர்ந்து தமிழகத்தில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டித்து மகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.இதில் தே. மு. தி. க.பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்.இதற்காக கோவில்பட்டி வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தது. ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவில்பட்டிக்கு விஜய பிரபாகனை அழைத்து வர ஆலோசனைக் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றலில் பாரபட்சமா? டீக்கடையை இழந்த பெண் ஆவேசம்

கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட புதுக்கிராமத்தின் மெயின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று மாலை நகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் மகேஸ்வரி என்பவர் நடத்தி வந்த டீ கடையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு இடித்ததாக கூறப்படுகிறது.ஏற்கனவே நகராட்சி அதிகாரிகள் கூறியதால் சாலையின் ஓரத்தில் வைத்திருந்த பொருள்களை அகற்றி விட்டதாகவும், முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தனது கடையை மட்டும் நகராட்சி அதிகாரிகள் வேண்டும் என்றே இடித்து விட்டதாக கூறி மகேஸ்வரி கண்ணீருடன் சாலையில் பொருள்களை […]

கோவில்பட்டி

அகில இந்திய ஆக்கி :மும்பையை துவம்சம் செய்த கோவில்பட்டி ; 6 கோல்கள்

லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.3-ம் நாளான இன்று காலையில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின. இதில் 2:0 என்ற கோல் கணக்கில் புனே கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது. மாலையில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் […]

செய்திகள்

அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்டுத்துவதை தடுக்க வேண்டும்; டி.ஜி.பி.யிடம்  டி.ஜெயக்குமார் மனு  

சென்னையில் டி.ஜி.பி.யை  அ.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  டி.ஜெயக்குமார் நேரில் சந்தித்து  மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. வருமாறு:- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் எந்த நிலையிலும் அதிமுகவுக்கு  கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத நிலையில் கழகத்தின் கொடியை பயன்படுத்துவதோ, அதிமுக  என்ற பெயரைக்கூட சொல்லக்கூட தகுதியற்றவர்கள்.அதிமுக  பெயரை பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளது.தேர்தல் ஆணையத்தின் பதிவும் உள்ளது.ஒ.பன்னீசெல்வமும் சரி,அவரை சார்ந்தவர்களும் சரி,அதிமுக என்ற பெயரை உபயோகப்படுத்தக்கூடாது. கட்சி சின்னத்தை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலைய வியாபாரிகளுக்கு நகராட்சி சந்தையில் முன்னுரிமை வழங்க கோரிக்கை

கோவில்பட்டியில் நகராட்சி மூலம் செயல்பட்டு வந்த தினசரி சந்தை புதுபிக்கப்படுகிறது. இதனால் அங்கு கடைகள் அமைத்திருந்தவர்களுக்கு கூடுதல் பஸ் நிலையத்தில் த்ரகாளிகமாக சந்தை மாற்றப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் அங்கு கடை அமைக்காமல் திட்டங்குளம் முத்துநகர் சந்திப்பில் வியாபாரிகள் சங்கத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் இடத்தில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரத்தை தொடங்கினார்கள். உரிய அனுமதி பெறவில்லை என்று கூறி கடைகள் அடைக்கும்படி கோட்டாட்சியர் உத்த்ரவிட்டார். இதன்படி அங்கிருந்து கடைகள் அடைக்கப்பட்டு உரிய அனுமதி […]