கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கிப்போட்டி : சென்னை, டெல்லி அணிகள் வெற்றி
லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கோவில்பட்டியில் 8ம் தேதி முதல் நடந்து வருகின்றன.
கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் நான்காம் நாளான இன்றுன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில்
தமிழ்நாடு போலீஸ் சென்னை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா ட்ரைனிங் சென்டர் பெங்களூரு அணிகள் மோதின .இதில் 3:2 என்ற கோல் கணக்கில் சென்னை, தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது.
12 வது லீக் ஆட்டத்தில்டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும்சென்னை சென்ட்ரல் எக்ஸைஸ் அணிகள் மோதின
.போட்டி தொடங்கிய 6-வது நிமிடத்தில் சென்னை சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் தமிழரசன் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.
10-வது நிமிடத்தில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு, அணி வீரர் சுனில் யாதவ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டு சம நிலையை ஏற்படுத்தினார்.
பின்னர் 13-வது நிமிடத்தில் டெல்லி அணி வீரர் சுனில் யாதவ் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டு அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.
37-வது நிமிடத்தில் அதே அணி வீரர் தல்விந்தர் சிங் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். இதனால் 3:1 என்ற நிலையில் டெல்லி அணி முன்னிலையில் இருந்தது.
அந்த சமயத்தில் 51-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஜோஸுவா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். அதன்பிறகு யாரும் கோல் போடவில்ல.
இதனால் 3:2 என்ற கோல் கணக்கில் டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு அணி வெற்றிப் பெற்றது
சுப்பையா தாஸ் மற்றும் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை அணி வீரர் வினித் ராஜாவுக்கு கிடைத்தது.