பிரேமலதா 28 -ந் தேதி கோவில்பட்டி வருகை : தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 பிரேமலதா 28 -ந் தேதி கோவில்பட்டி வருகை : தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வருகிற 28ஆம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்டதையும் தொடர்ந்து தமிழகத்தில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது கண்டித்து மகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் தே. மு. தி. க.பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்.
இதற்காக கோவில்பட்டி வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தது.


ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவில்பட்டிக்கு விஜய பிரபாகனை அழைத்து வர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு தேமுதிக வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சில்
மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன் பொதுக்குழுஉறுப்பினர்கள் ஜி.ஆர்.சாமி,முருகன்,கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் ஒன்றியசெயலாளர் கயத்தார் நடராஜன், கோவில்பட்டி கிழக்கு பொன்ராஜ்,புதூர் ஆறுமுகபெருமாள், புதூர் பேரூர் ரவி,கேப்டன் மன்றம் மேகலிங்கம், முத்துக்குமார் நகர நிர்வாகி பிரசன்னா மதிமுத்து மத்திய சென்னை சக்தி வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *