அகில இந்திய ஆக்கி :மும்பையை துவம்சம் செய்த கோவில்பட்டி ; 6 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

 அகில இந்திய ஆக்கி :மும்பையை துவம்சம் செய்த கோவில்பட்டி ; 6 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் கடந்த 18ம் தேதி முதல் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.
3-ம் நாளான இன்று காலையில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில்

புனே கஸ்டம்ஸ் அணியும், சென்னை இந்தியன் பேங்க் அணியும் மோதின.

இதில் 2:0 என்ற கோல் கணக்கில் புனே கஸ்டம்ஸ் அணி வெற்றி பெற்றது.

மாலையில் நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் மும்பை யூனியன் பேங்க் மற்றும் கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி, அணிகள் மோதின.

ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை கோவில்பட்டி அணியினரின் ஆதிக்கம் காணப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களை உற்சாகப்படுத்தியது. அடுத்தடுத்து கோல்கள் போட்டு மும்பை அணியை கோவில்பட்டி வீரர்கள் துவம்சம் செய்தனர்.

ஆட்டம் தொடங்கிய 23-வது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் ஷண்முகம் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

27-வது நிமிடத்தில் தினேஷ் குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் போட்டார்.

29-வது நிமிடத்தில் சுந்தரபாண்டி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.


தொடர்ந்து 3 கோல்கள் வாங்கிய மும்பை யூனியன் பேங்க் அணியினர் பதில் கோல் போடமுடியாமல் திணறினார்கள்.

42-வது நிமிடத்தில் கோவில்பட்டி அணி வீரர் செந்தில்குமார் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.

54-வது நிமிடத்தில் முஹம்மது யாசின் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 57-வது நிமிடத்தில் அரவிந்த் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். இதன் மூலம் கோல் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இறுதியில் இதில் 6:0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆப் எக்ஸலன்ஸ் எஸ்டிஏடி, அணி அபார வெற்றிபெற்றது. இந்த அணியின் வீரர் ஷண்முகம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ஆல்பர்ட் ஜான் மற்றும் சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *