கோவில்பட்டி சுபா நகரைச் சேர்ந்த மூக்கையா மகன் முத்துராஜ் (வயது 53) இவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்காக கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். தலைமை தபால் அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்த போது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் […]
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வித்யா ஹோமம் நடைபெற்றது . அரசாங்க தேர்வு, மத்திய இடைநிலை கல்விவாரிய தேர்வு(CBSE), 10,11,12 மற்றும் நீட் தேர்வு, TNPSC தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கான சிறப்பு வித்யா ஹோமம் நடைப்பெற்றது. இதனையொட்டி காலையில் சங்கல்பம் கணபதி பூஜை, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், ருத்ர ஜபம் வருண ஜபம் ஹயக்கிரிவர் ஹோமம் சரஸ்வதி ஹோமம், பூர்ணாகுதி தீபாரதனை நடைப்பெற்றது. பின்னர் […]
கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,நலன் பவுண்டேஷன் சார்பில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை முகாம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, நலன் பவுண்டேஷன் நிர்வாகி வள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். அக்குபஞ்சர் இலவச மருத்துவ முகாமினை ரோட்டரிமாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ் தொடக்கி வைத்து […]
மான்கள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு உரிய நிவாரணம்; கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ.வுக்கு வன அலுவலர்
கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார்.’ இந்த மனுமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கடம்பூர் ராஜுவுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களில் மான்கள் சேதப்படுத்தமால் […]
கோவில்பட்டி ஏஞ்சல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி , ஏ .கே.ஆல் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி சங்கம், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கம் மற்றும் பெஸ்ட் லைப் பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைத்னு இன்று கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டியை நடத்தின. இயற்கை வளங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த இந்த மாரத்தான் போட்டி ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் நடத்தபட்டது. 500 மீட்டர் 1 கி,மீ., 2 கி.மீ.,4கி.மீ. தூர போட்டிகள் நடந்தன, நகராட்சி தலைவர் […]
உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதிபோல், ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துரோக செயல்களில் ஈடுபட்டார்; டி.ஜெயக்குமார்
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புரட்சித் தலைவி அம்மாவின் மறைவுக்குப் பின், ஓ. பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதித்திட்டமிட்டு, நம் பரம்பரை எதிரி தீயசக்தி தி.மு.க.-வோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ. பன்னீர்செல்வம். நம் இயக்கத்தைக் காக்கப் போராடி வரும் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் […]
கோவில்பட்டி புதுக் கிராமம் அருள்மிகு ஸ்ரீ வேம்படி சுடலை மாடசுவாமி திருக்கோவில் 8 ஆம் பொங்கலை முன்னிட்டு நேற்று இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் முன்னாள் அமைச்சர் , கடம்பூர் செ.ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் வட்டாட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோவில் 9வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கடம்பூர் […]
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடத்தப்பட்டது. தூத்துக்குடி வ.உ. சி கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், விருதுநகர், சென்னை போன்ற பல பகுதிகளில் உள்ள 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சுமார் 10 ஆயிரம் ஆண், பெண்கள் வரை தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர். அதில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இன்று […]
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் போல்பேட்டை ரவுண்டானா அருகில் மற்றும் பாளையங்கோட்டை ரோடு சிதம்பர நகர் விலக்கு ஆகிய இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டு உள்ளன. புதிய போக்குவரத்து சிக்னள்கள் திறப்பு நிகழச்சி இன்று காலை நடைபெற்றது கனிமொழி எம்.பி., இரண்டு போக்குவரத்து சிக்னல்களையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் .கீதாஜீவன் ,மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன், ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .லோக.பாலாஜி சரவணன் பெரியசாமி அறக்கட்டளை நிறுவனர் .பா.ஜீவன் […]
சீர்மிகு திட்டத்தின் கீழ் குப்பை கொட்டப்படும் நிலங்களை மீட்டெடுக்கும் வகையிலும் குப்பைகள் அனைத்தையும் தரம் வாரியாக பிரித்து அசுற்றிடும் வகையிலும் உயிரி சுரங்சு மீட்பு முறையில் தூத்துக்குடி தருவைக்குளம் உரக்கிடங்கு பகுதியானது மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்படி நிலத்தினை பண்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது . மாசு கலந்த காற்றினை தூய்மையாக மாற்றுவதற்கான இப்பணிகள் பகுதி பகுதியாக நடைபெற்று வருகிறது. மொத்துமுள்ள 586 ஏக்கரில் இதுவரை சுமார் 28 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு […]