கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டி
கோவில்பட்டி ஏஞ்சல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி , ஏ .கே.ஆல் ஸ்போர்ட்ஸ் வளர்ச்சி சங்கம், தூத்துக்குடி மாவட்ட தடகள சங்கம் மற்றும் பெஸ்ட் லைப் பவுண்டேசன் ஆகிய அமைப்புகள் இணைத்னு இன்று கோவில்பட்டியில் மினி மாரத்தான் போட்டியை நடத்தின.
இயற்கை வளங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த இந்த மாரத்தான் போட்டி ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு வயது பிரிவுகளில் நடத்தபட்டது. 500 மீட்டர் 1 கி,மீ., 2 கி.மீ.,4கி.மீ. தூர போட்டிகள் நடந்தன,
நகராட்சி தலைவர் கருணாநிதி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் நாகமுத்து, சட்ட ஆலோசகர் கார்த்தி ராஜ், அன்னை ஜுவல்லர்ஸ் மேலாளர் திருநாவுக்கரசு ஸ்டார் ரத்ததான கழக தலைவர் செல்வகுமார், ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்,
போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் ,முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வளன்க்கப்பட்டன.
பரிசுகளை நகராட்சி தலைவர் கருணாநிதி, ஒன்றிய திமுக செயலாளர் முருகேசன், தடகள சங்க செயலாளர் பழனிசாமி, வெங்கடேஸ்வரா மருத்துவமனை தலைமை மருத்துவர் தாமோதரன், ஏஞ்சல் நர்சரி பள்ளி தாளாளர் அருள் டேனியல் ராஜ்,இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்கள்.