கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தல்: ஆலோசனை கூட்டத்தில் பி.ஏ.கே.பழனிச்செல்வம் அணி வேட்பாளர்கள்
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்தின் 2022-2025 நிர்வாககுழு தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்கிறது, இதற்கான வாக்குபதிவு பாண்டவர்மங்கலம் காமராஜர் இண்டர்நேஷனல் அகாடமியில் நடக்கிறது, இந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையில் 65 பேர் நிர்வாக குழுவில் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து எம்.டி.எம்.தங்கராஜ் தலைமையிலான அணியினர் போட்டியிடுகிறார்கள்.நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தலைமையிலான அணிக்கு யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. இந்த அணியினரின் தேர்தல் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் […]