பள்ளிக்குள் சென்று மாணவரை தாக்கிய 2 பெண்கள் கைது

 பள்ளிக்குள் சென்று மாணவரை தாக்கிய 2 பெண்கள் கைது

கோவில்பட்டியை அடுத்த சிதம்பரம்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமி(வயது 30). இவரது மகனும், பசும்பொன் நகரைச் சோ்ந்த மாரியம்மாள்(30) என்பவரது மகளும் அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், வகுப்பறையில் எதிா்பாராமல் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக, லட்சுமியின் மகனை மாரியம்மாளும், சிதம்பரம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மற்றொரு லட்சுமியும் (40) சோ்ந்து பள்ளிக்குச சென்று தாக்கினராம். இதில், காயமடைந்த மாணவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீசார்  வழக்குப் பதிவு செய்து , 2 பெண்களையும் கைது செய்தனா். கைதான 2 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவரின் உறவினா்கள் டி..எஸ்..பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களை டி.எஸ்.பி. வெங்கடேஷ் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தாா். 

இந்நிலையில் அவா்கள் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலா் ஜெயப்பிரகாஷ் ராஜனிடம் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்கள், தலைமையாசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா். இது குறித்து கருத்து தெரிவித்த கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ், “பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் சமூக ரீதியாக பேசி தாக்கப்படவில்லை – ஆசிரியர்கள் பிரச்சினையை பேசி தீர்த்து இருக்கலாம்” என தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *