Month: November 2022

செய்திகள்

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீனிவாசன், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 10-ந்தேதி ஆஜரானார். அப்போது அவர்,” இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை […]

தூத்துக்குடி

உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்; கனிமொழி தொடக்கி வைத்தார்

தூத்துக்குடி எஸ்.ஆர்.எம். மஹாலில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பு கூட்டம நடைபெற்றது. இந்த கூட்டத்தை கனிமொழி எம்.பி. குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார் விழாவில் அவர் பேசும்போது, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, கிராமப்புறங்களின் மேம்பாட்டிற்குப் பங்காற்றிடும் வகையில் சமூகப் பொறுப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வரும் ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், HCL SAMUDAY […]

செய்திகள்

செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை மூட வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

செயற்கை நீர்வீழ்ச்சிகளுடன் செயல்படும் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும் எம்ரி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை உடனடியாக மூட வேண்டும். இதேபோன்று, குற்றாலத்தில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஊட்டி, குமரி மாவட்டங்களிலும் செயற்கை நீர்வீழ்ச்சி விவகாரத்தில் குற்றவியல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட 11 மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் , வணிகவளாகம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காக்களில் தவறான செய்கைகளை காட்டி, மாவட்டத்தை தவறாக சித்தரித்து அவமதிக்கும் வகையில் சில மாணவர்கள் வீடியோ பதிவிட்டு அதனை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோ பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டரில் இப்பதிவை டேக் செய்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை […]

செய்திகள்

தி.மு.க. இளைஞர் அணி மாநில செயலாளராக உதயநிதி ஸ்டாலின், துணை செயலாளர்களாக எஸ்.ஜோயல்

தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தி.மு.க. சட்ட திட்டம் விதி-18,19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர்- துணை செயலாளர்கள் தலைமைகழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள். இளைஞர் அணி செயலாளர்- உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி துணை செயலாளர்கள்- எஸ்.ஜோயல் (தூத்துக்குடி) ந.ரகுபதி(எ) இன்பா ஏ.என்.ரகு(ராமநாதபுரம்), நா.இளையராஜா(திருவாரூர்) மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

கோவில்பட்டி

கோவில்பட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை

தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட குடும்பநலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் பொருட்டு இருவார விழா வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.. அதிக அளவில் ஆண்கள் குடும்பநல கட்டுப்பாடு சிகிச்சையை ஏற்கும் வகையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் அனைத்து […]

செய்திகள்

கிராம உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப டிசம்பர் 4-ம் தேதி எழுத்துத் தேர்வு;

தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தென்காசி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டதில் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு 4.12.2022 அன்று நடைபெறவுள்ளது தென்காசி வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் வட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், செங்கோட்டை வட்டததிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். […]

பொது தகவல்கள்

காகம்-அபூர்வ தகவல்கள்

.காக்கை …. ஒரு பறவை இனம் என்பதை நம்மில் பல பேர் மறந்திருப்போம். ஏனென்றால் காகத்தை காக்க காக்க என்று சொல்லுவோமே தவிர, அதை ஒரு பறவை என்று நாம் என்றுமே உணர்ந்து மதித்தது கிடையாது. அதாவது கிளி, குருவி, புறா, போன்ற பறவைகளை நாம் பறவைகளாக பாவிக்கின்றோம். ஆனால் காகத்தை பார்க்கும் போது அதோ காகம் பறவை என்று என்றாவது சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோமா. ஆனால் இந்தப் காக்கை பறவை இனத்திற்கு, மற்ற பறவைகளிடம் இல்லாத அபூர்வ […]

செய்திகள்

பா.ஜ.க.வில் இருந்து காயத்ரி ரகுராம் இடைநீக்கம்

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் […]

கோவில்பட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கலை நிகழ்ச்சியுடன் தெருமுனை பிரசாரம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியார் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் அரசின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச நலத் திட்ட உதவிகள் கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு பிரசாரத்தை கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் 21.11.2022 அன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இன்று 22.11.2022 காலை 11.மணி அளவில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் […]