கோவில்பட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை

 கோவில்பட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை

தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட குடும்பநலத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் பொருட்டு இருவார விழா வருகிற டிசம்பர் 4-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது..
அதிக அளவில் ஆண்கள் குடும்பநல கட்டுப்பாடு சிகிச்சையை ஏற்கும் வகையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கான குடும்ப நல சிகிச்சை முகாம் அனைத்து வேலை நாட்களிலும் நடக்கிறது.
இந்த முகாமில் வருகிறவர்களுக்கு சிகிச்சை முடிந்ததும் அரசு ஈட்டுத் தொகையாக ரூ.1,100 மற்றும் சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.200-ம் வழங்கப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முகாம் ஏற்பாடுகளை மருத்துவம் மற்றும் குடும்பநலம் துணை இயக்குனர் பொன் இசக்கி, மருத்துவக்கல்லூரி டீன் சிவக்குமார், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கற்பகம், துணை இயக்குனர்கள் பொற்செல்வன் (தூத்துக்குடி), ஜெகவீரபாண்டியன் (கோவில்பட்டி), மாநகர நல அலுவலர் அரண்குமார், நகர் நல அலுவலர் விஜய் ஆகியோர் செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *