• May 9, 2024

Month: October 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பால்குட ஊர்வலங்கள்; தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி நகரம் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள தேவர் சிலைக்கு அணைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மேலும் வெவ்வேறு இடங்ககளில் இருந்து பெண்கள் தனித்தனி குழுக்களாக பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள். இதன் காரணமாக கோவில்பட்டி நகரம் பரபரப்புடன் காணப்ட்டதஅகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு நிறுவனர் அண்ணாதுரை தலைமையில் இலுப்பை யூரணியில் இருந்து 1115 […]

கோவில்பட்டி

115வது ஜெயந்தி : கோவில்பட்டியில் தேவர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவனர் இனாம் மணியாச்சி சோலையப்ப தேவர் குடும்பத்தினர், சிலை முன்பு அதிகாலையில் பொங்கலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதனை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில், நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட பஞ்சாயத்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அரசு பஸ்களின் அவல நிலை பற்றி புகார்: ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கே.டி.சி. நகர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களின் வருகை பதிவேடுகள் பயோ மெட்ரிக் முறையில் இருப்பதை பார்வையிட்டார். வண்டி எண், தேதி, எத்தனை லிட்டர் டீசல் போட்டது என்ற டீசல் போடுவதற்கான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பேருந்து பழுது செய்வதை பார்வையிட்டு பழுது நீக்குவது பற்றிய செயல்முறைகளை கேட்டறிந்தார். மழைக்காலங்களில் மேற்கூரையில் இருந்து பஸ்சுக்குள் மழைநீர் வருவதாக பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால் பஸ்களை ஆய்வு செய்து புதிய முறைப்படி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு […]

தூத்துக்குடி

போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சிவந்தா குளம் ரோடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். தூத்துக்குடி அய்யாசாமி காலனி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மகன் ரத்னஹரிஷ் (21), மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் […]

செய்திகள்

மனநல காப்பகத்தில் இணைந்த ஜோடிக்கு பணி நியமன ஆணை; அமைச்சர் வழங்கினர்

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்த இடத்தில் சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும் (வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவுக்கும் (36) இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து இவர்களுக்கான திருமணம், கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று நடந்தது. காப்பகத்துக்கு வெளியில் உள்ள கோவிலில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.இதை தொடர்ந்து காப்பக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு […]

சினிமா

9 வருடங்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது

பொங்கல் பண்டிகையில் விஜய் நடிக்கும் வாரிசு படம் திரைக்கு வரும் என்பதை படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று யூகமான தகவல்கள் வலைத்தளத்தில் பரவி வந்தாலும், பட நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வராமல் இருந்தது. இந்த நிலையில் துணிவு படமும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் பட நிறுவனம் பெற்றதுடன் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழா; 31-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது

கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோவிலில் கந்த சஷ்டி விழாவும், லட்சார்ச்சனை விழாவும் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. தினமும் காலை 8 மணிக்கு கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை நடந்து வருகிறது. காலை 10.30 மணிக்கு பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், மாலை 5 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. வருகிற் 31-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த தகவலை […]

கோவில்பட்டி

கந்தசஷ்டி விழா: கழுகுமலையில் நாளை சூரசம்ஹாரம்

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி தொடங்கியது. விழாநாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.5-ம் நாள் விழாவான இன்று(சனிக்கிழமை) மதியம் சூரபத்மனின் இளையசகோதரர் தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.இதை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு கோவில் நடை […]

செய்திகள்

புதுமைப்பெண் திட்டம்; மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற கல்லூரி முதல் ஆண்டு மாணவிகள்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.நவம்பர் 1-ந்தேதி தொடங்கும் விண்ணப்பபதிவு 11-ந்தேதி முடிவடைகிறது. மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.தற்போது 2, 3 மற்றும் 4-ம் […]