• May 18, 2024

Month: August 2022

தூத்துக்குடி

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா தேரோட்டம்; பக்தர்கள் குவிந்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்கள் காட்சி அளித்தனர்.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு விநாயகர் எழுந்தருளிய தேர் வெளி வீதி நான்கிலும் பவனி வந்தது.6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் வெளி வீதி […]

செய்திகள்

காங்கிரஸ் நிலைகுலைவது கவலையாக உள்ளது- உமர் அப்துல்லா

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி மூத்த தலைவருமான உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக உமர் அப்துல்லா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-நீண்டகாலமாக வதந்திகள் பரவி வந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பின்னடைவு குறையவில்லை. சமீபகாலமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில் குலாம் நபி ஆசாத்தின் ராஜினாமா கடிதத்தை வாசிக்கும்போது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய, பழமையான […]

செய்திகள்

காங்கிரசில் இருந்து குலாம்நபி ஆசாத் விலகினார் ; ராகுல்காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி என்ற முறையிலும், தனது சொந்த மண்ணில் கட்சியை தொடங்க விரும்புவதாக அவர் கூறி இருக்கிறார்.“நான் ஜம்மு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய

கோவில்பட்டியில் இன்று காலையில் இருந்து வெயில் கொளுத்தியது. பிற்பகல் 2 மணிக்கு மேல் வெப்ப நிலை மாறி மேகம் திரண்டு இருள் சூழ்ந்தது.3 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. காற்று இல்லாமல் மழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. புதுரோடு இறக்கத்தில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது.மெயின் ரோட்டில் கால்வாயில் மழை தண்ணீர் கரை புரண்டு ஓடியது. ஏற்கனவே சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு கம்மவார் டிரஸ்ட் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். கம்மவார் டிரஸ்ட் அறக்கட்டளை தலைவர் வி.பி.எஸ். சுப்பையா, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவிடம் ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் பி.ஆர்.எஸ். சீனிவாசன், விநாயகா ரமேஷ், வரதராஜன், ரவிச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் ஆசிரியர் கெங்கம்மாள் வரவேற்று […]

செய்திகள்

ரூ.2௦ ஆயிரம் லஞ்சம்: துணை தாசில்தார்-புரோக்கர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகத்தில் மணிகண்டன்(46) என்பவர் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். மேலூர் கருத்தபுளியன்பட்டியில் வசிக்கும் பிரபு என்பவர் தனது மனைவி மாலதிக்கு ரூ.15 லட்சம் சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக துணை தாசில்தார் மணிகண்டனை அணுகினார்.அதற்கு அவர் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அந்த தொகையை புரோக்கர் மூக்கனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரபு ,இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த […]

செய்திகள்

தி.மு.க.எம்.எல்.ஏ.நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. மொய் விருந்து நடத்தியவர்கள், வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர்.பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் 5 வருடங்களுக்கு முன்பு மொய் விருந்து நடத்தினார். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் அவர் மொய் விருந்து நடத்தினார். பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள […]

செய்திகள்

விஜயகாந்த் 70-வது பிறந்தநாள்; கட்சி அலுவலகத்தில் தொண்டர்களின் வாழ்த்தை பெற்றார்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 70-வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாக கட்சியினர் கொண்டாடுவது வழக்கம். இந்த வகையில் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குதல் போன்றவை நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வருவாரா? அவரை பார்க்க முடியுமா என்று தொண் டர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்த நிலையில் பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு […]

செய்திகள்

அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கு: எடப்பாடி பழனிசாமி தரப்பு பரபரப்பு வாதம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்” என்று தீர்ப்பு அளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை […]

செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா; 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஒன்றாகும். தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி (தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.கடந்த […]