எடப்பாடி பழனிசாமியை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் பரபரப்பு சுவரொட்டிகள்
![எடப்பாடி பழனிசாமியை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் பரபரப்பு சுவரொட்டிகள்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/111.jpg)
தூத்துக்குடி நகரில் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் கீழ் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர் உள்ளிட்டவர்களை கைது செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்ற தலைப்பிலான இந்த சுவரொட்டியில் குடிப்பிடப்பட்டிருந்த வாசகம் விவரம் வருமாறு:-
இது வேதாந்தாவின் கார்ப்பரேட் கொள்ளைக்காக அரசு நடத்திய வன்முறை!
அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை!
தமிழ்நாடு அரசே!
குற்றவாளியான எடப்பாடி பழனிசாமி, போலீசு உயரதிகாரிகள், கலெக்டர், துணை தாசில்தார்கள் உள்ளிட்டோரை உடனடியாக கைது செய்! சிறையிலடை!
சிறப்பு சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை அகற்று!
இவ்வாறு சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)