தூத்துக்குடி சத்திரம் தெருவில், மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் திறப்பு விழா திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு ரூ. 2.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் மற்றும் ரூ. 1.38 கோடி மதிப்பீட்டில் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி புதிதாகக் கட்டப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டையாபுரம், மற்றும் புதியம்புத்தூர், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. .இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி இசிஆர் சாலை கோமஸ்புரம் பகுதியில் நடைபெற்ற ஆட்டு சந்தை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்று பேசினார். இச்சந்தையை அமைச்சர் கீதாஜீவன் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில், 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி 9 துறைமுகங்களிலும் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூத்துக்குடி மாநகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி தூய்மைப் பணியாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.725, ஓட்டுநர்களுக்கு ரூ.763, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு ரூ.725 […]
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் நாள் காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் […]
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 265 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தினமும் காலை 5 மணிக்கு கடலுக்கு செல்லும் இந்த மீனவர்கள் இரவு 9 மணிக்கு கரை திரும்பி விடுவர். இந்நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் கேரள விசைப்படகு மீனவர்கள் தங்கி தொழில் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்கள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து […]
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்களை குறிவைத்து கள்ள சந்தையில் பயோ டீசல் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்களின் புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று இரவு மீன் பிடித் துறைமுகத்திற்கு கள்ள சந்தையில் பயோ டீசல் விற்பனைக்கு வருவதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் பேச்சிமுத்து […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அவர்களின் அறிவுரையின்படியும், தூத்துக்குடி மாவட்டத்தில், 1.1.2025-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (31.12.2006 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் ஏதுவாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2025 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ர=அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி அடுத்துள்ள கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளநீர் செல்லக்கூடிய ஐந்தாவது மடை மற்றும் பெரியநாயகிபுரம் ஆபிரகாம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய் பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19ம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில கூறப்பட்டு இருப்பதாவது:- “பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 19.10.2024 அன்று சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020