அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலாகா மாற்றம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் வகித்து வந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி கோட்டை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக, 2-வது இடத்தில் அமைச்சர் துரைமுருகன் இருந்து வருகிறார். தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், அவை முன்னவராகவும் இருந்து வருகிறார். தமிழகத்தில் கனிம வள கொள்ளை பிரச்சினை […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் 9.5.2025 மற்றும் 10.5.2025 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 8.5.2025 மாலை 6 மணி முதல் 11.5.2025 காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா – 2023 சட்டப்பிரிவு 163(1) -ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இரு வாரம் அமைதியாக இருந்த இந்தியா இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் […]
ராஜஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்; சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது. நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் அதிரடியாக நுழைந்து அங்குள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன. பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி […]
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், குலசேகரபுரம் கிராம ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி தூய்மை காவலர்கள் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெற்று மக்கும் குப்பைகளை உரக்கிடங்கில் இட்டு உரமாக […]
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தன. இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது. பூஞ்ச், பாரமுல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பதுங்கு குழிகளில் ஒளிந்து கொண்டனர். சிலர் பாதுகாப்பான இடங்களை […]
அமைச்சர்கள் ரகுபதி, துரைமுருகன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.*அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு .*அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துறைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. * அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் சேர்த்து கவனிப்பார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள நீராவி புதுப்பட்டியில் உள்ள காளியம்மன், துர்க்கை அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. காளியம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக அலங்காரங்கள் உட்பட சிறப்பு பூஜைகள் நடந்தது,அதனைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து கும்மி பாடல்கள் பாடி முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக முக்கிய விதிகள் வழியாக சென்று அய்யனார் கோவில் குளத்தில் கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் நிராவி புதுப்பட்டி கம்மவார் சங்க நிர்வாகிகள் பாலமுருகன்,பாலகிருஷ்ணன்,ராமமூர்த்தி,சுப்புராமன்,சங்கரசுப்பு,நடராஜன்,நவநீதன், […]
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,92,494 மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316 மாணவர்களின் எண்ணிக்கை: 3,73,178 தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%) மாணவியர் 4,05,472 (96.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16 %) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049 கடந்த மார்ச்- 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,60,606. […]
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கி, 25-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது. அந்த பணிகளும் நிறைவு […]