கோவில்பட்டியில் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்; சுவாமி வேடத்தில் சிறுவர், சிறுமியர்
![கோவில்பட்டியில் முளைப்பாரி, பால்குடம் சுமந்து பக்தர்கள் ஊர்வலம்; சுவாமி வேடத்தில் சிறுவர், சிறுமியர்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/1e5c692e-b77f-4b78-ab51-a355c365abfc-850x418.jpg)
கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்திவிநாயக்ர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு பால்குட அழைப்பும், தீர்த்தகுட அழைப்பும் நடந்தது,
பகதர்கள் பலர் பால்குடம் சுமந்தும், முளைப்பாரி சுமந்தும் ஊரவலமாக சென்றனர். சிறுவர்கள் சுவாமி வேடமணிந்து கலந்து கொண்டனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/57ccd130-9b6f-4707-9104-a248425d3f29.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/f9763c2a-e7a3-4646-ac8c-5f7273468ee5.jpg)
பின்னர் பகல் 11 மணிக்கு மேல் சக்தி விநாயகருக்கும், கோபுர விமான கலசங்களுக்கும் , மூலவருக்கும், உற்சவருக்கும் வருடாபிஷகம் நடைபெற்றது. 12.3௦ மணிக்கு பிறகு சிறப்பு அலங்கார தீப ஆராதனை நடந்தது, இரவு 7 மணிக்கு பிறகு சக்தி விநாயகர் சப்பரத்தில் திருவீதி உலா நடக்கிறது.
நாளை 1-ந்தேதி மாலை 4 மணிக்கு மேல் பொங்கல் விழா நடைபெறுகிறது/. இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ நாராயணகுரு திடலில் டாக்டர் இராம பூதத்தான் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)