101 பால்குடம் ஊர்வலம்; கடம்பூர் ராஜூ தொடக்கி வைத்தார்
![101 பால்குடம் ஊர்வலம்; கடம்பூர் ராஜூ தொடக்கி வைத்தார்](https://tn96news.com/wp-content/uploads/2022/08/7812366b-e4ff-4216-bd36-85581b58a3dc-850x435.jpg)
கோவில்பட்டி கதிர்வேல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காமராஜ்நகர் ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் இருந்து 101 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து சக்தி விநாயகர் கோவிலுக்கு வந்தனர். அந்த பாலை வைத்து விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/08/96a94537-8865-43d7-9c3f-3072af6d56c0.jpg)
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பால்குடம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்/.
ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, அ.தி.மு.க. நிர்வாகி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)