• May 18, 2024

கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ; கோவில்களில் சிறப்பு பூஜைகள்

 கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ; கோவில்களில்  சிறப்பு  பூஜைகள்

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் விநாயகர் கோவில்களில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில்பட்டியில் மூக்கரை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதுபோல் புது ரோடு இறக்கத்தில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் பல்வேறு விநாயகர் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.

ஸ்ரீ விக்ன விநாயகர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
கணபதி ஹோமம் நடந்த காட்சி
பிரசாதம் வழங்கப்பட்ட காட்சி

கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்ன விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 1௦ மணிக்கு மேல் 11.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் , சிறப்பு பூஜைகள் நடந்தன.

அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். விநாயகரை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, சாம்பார்சாதம், சுண்டல் ஆகியவை பாக்கு தட்டில் வைத்து விநியோகம் செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்,

இக்கோவிலின் வருடாபிஷேக விழா செப்டம்பர் 11-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம்,9 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் விக்ன விநாயகருக்கு வருடாபிஷேகம், அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. பின்னர் பிரசாதம் வழங்கப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *