கோவில்பட்டி, கழுகுமலையில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின்பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலாஜி நகர், மீனாட்சி நகர் ,விஜயாபுரி துணை மின் நிலையத்தின் துரைசாமிபுரம், கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம், செண்பகப்பேரி, மேல பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, அண்ணாமலை நகர், அன்னை தெரசா நகர், இ.பி.காலனி, ராஜீவ் நகர் மேற்கு பகுதி, ஊத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், குருமலை, கழுகாசலபுரம், மும்மலைப்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
கழுகுமலை மற்றும் எம். துரைசாமி புரம் உபமின் நிலையங்கள் மூலம் மின்வினியோகம் பெறும் வானரமூட்டி, வெயிலு கந்தபுரம், காளாம்பட்டி, காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்க புரம், கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளிலும், எட்டயபுரம் உபமின் நிலையத்தின் மூலம் மின் வினியோகம் பெறும் கருப்பூர், அருணாசல புரம், வீரப்பட்டி, கோட்டூர், கீழ் நம்பியாபுரம், மேல நம்பியாபுரம் பகுதிகளிலும், கழுகுமலை உபமின் நிலையத்தின் மூலம் மினி வினியோகம் பெறும் தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.