• May 17, 2024

கோவில்பட்டியில் கம்பன் கழக 2 நாள் விழா: சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடக்கிறது

 கோவில்பட்டியில் கம்பன் கழக 2 நாள் விழா: சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் நடக்கிறது

கோவில்பட்டி கம்பன் கழக முதலாம் ஆண்டுவிழா வருகிற 3௦ மற்றும் 31-ந்தேதிகளில் நடக்கிறது,கதிரேசன் கோவில் சாலையில் உள்ள ஆர்த்தி மகால் மண்டபத்தில் நடைபெறுகிறது.
தொடக்க விழா
3௦-ந் தேதி மாலை 5.3௦ மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியை அமிர்தவர்ஷிணி மற்றும் குழுவினரின் தமிழிசை நடக்கிறது. 6.15 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல் நடக்கிறது, ஆர்த்தி மருத்துவமனை டாக்டர் ஆர்,கோமதி, மதுரை கம்பன் கழக தலைவர் சங்கர சீத்தாராமன், தொழில் அதிபர் ஹரி பாலகன் ஆகியோர் திருவிளக்கு ஏற்றுகிறார்கள்.
6.25 மணிக்கு தாய்க்கழக சீர் பெறுதல் நடக்கிறது. கோவில்பட்டி கம்பன் கழக துணை தலைவர் டாக்டர் சி.கே.சிதம்பரம் வரவேற்று பேசுகிறார். காரைக்குடி கம்பன் கழகத்தினர் சீர் வழங்குவார்கள். கோவில்பட்டி கம்பன் கழக நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி சீர் பெற்றுக்கொள்வார். வேங்கட்குமார் நன்றி கூறுகிறார்.
இரவு 7 மணிக்கு எழிலுரை நடக்கிறது. கம்பன் கழக தலைவர் லட்சுமனபெருமால் தலைமை தாங்குகிறார். அரசன் அன்கோ நெல்லையப்பன், காலாண்டை பராமரிப்பு துறை துணை இயக்குனர் நாராயணசாமி பாண்டியன் பேப்பர் ஸ்டோர் பெரியசாமி பாண்டியன், கம்பன் கழக துணை தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கம்பன் எனும் கடல் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். முடிவில் கம்பன் கழக இணை செயலாளர் மதிவாணன் நன்றி கூறுகிறார்.
சாலமன் பாப்பையா
31-ந்தேதி காலை 9.3௦ மணிக்கு சாதனை மாணவர்களுக்கு பாராட்டு நடைபெறும்.டாக்டர் சீனிவாசன், தலைமை தாங்குகிறார். செந்தில் எண்டர்பிரைசஸ் செல்வராஜ், கண் டாக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். டாக்டர் கோமதி பரிசளித்து பாராட்டுவார்.
கம்பன் கழக ஒருங்கிணைப்பாளர் சுனையரசன் வரவேற்று பேசுகிறார், நிர்வாக குழு உறுப்பினர் வேங்கடாலம் நன்றி கூறுகிறார்,
அன்றையை தினம் காலை 1௦ மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது. பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம், பழக்கடை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
ராமபிரானின் முப்பரிமானம் என்ற பொருளில் பேராசிரியர் மு.ராமச்சந்திரன் உரையாற்றுகிறார். தனயன் என்ற தலைப்பில் முருகேசன், தமையனாக கு.பாஸ்கர், தலைவனாக கண்ணன் ஆகியோர் பேசுகிறார்கள். முடிவில் வினோத் கண்ணன் நன்றி கூறுகிறார்.
,மாலை 5 மணிக்கு ஸ்ரீசத்யா சாய் சேவா சமிதியினரின் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக பஜனை நடக்கிறது.
தொடர்ந்து 5.3௦ மணிக்கு பட்டிமன்றம் நடக்கிறது. கம்பனை கற்போர் உள்ளத்தை பெரிதும் கவரும் தம்பி என்ற தலைப்பிலான பட்டிமன்றத்தின் நடுவராக சாலமன் பாப்பையா இருக்கிறார்.
இலக்குவனே என்று ராஜ்குமார், கருணாநிதி, குரு ஞானாம்பிகா ஆகியோரும், கும்பகர்ணனே என்று ரேவதி சுப்புலட்சுமி, சரவணசெல்வன், எஸ் ராஜா ஆகியோர் உரையாடுகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *