தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு


மாவட்டங்களுக்கு இடையேயான சப் ஜூனியர் பெண்கள் மாநில சாம்பியன் போட்டி மே 4(நாளை) முதல் 8 வரை ஆக்கி யூனிட் ஆப் புதுக்கோட்டை சார்பாக புதுக்கோட்டை பெண்கள் விளையாட்டு விடுதி ஆக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் மொத்தம் 28 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன தூத்துக்குடி மாவட்ட ஆக்கி அணிக்கான தேர்வு கடந்த மாதம் 29ஆம் தேதி கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர் 21 வீராங்கனைகள் கலந்து கொண்ட பயிற்சி முகாமில் சிறப்பாக விளையாடிய 18 பேர் கொண்ட மாவட்ட அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது வீராங்கனைகள் விவரம் வருமாறு

லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி:-விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜெய மாரியம்மாள், அஸ்வதி,
ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம்:- அர்ச்சனா, நர்த்திகா ஸ்ரீ,
இலுப்பையுரணி ஆக்கி கிளப் :- செல்வராணி, ஆர் . ஐஸ்வர்யா தீபிகா, மதுமிதா ,
கூசாலி பட்டி ஏ. எம்.சி அணி:- கிருத்திகா,
தூத்துக்குடி டவுன் ஆக்கி கிளப்:- பவித்ரா, மதுமிதா, சந்தியா,
தூத்துக்குடி தஷ்ணவிஸ் மாதா பெண்கள் அணி:- சரண்யா , கௌரி , கோவில்பட்டி:- காவியா, சபிதா
தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளை அகிலாண்டபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பால்ராஜ் அறிவித்து வீராங்கனைகளுக்கு சீருடைகளை வழங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட அணி மாநிலப் போட்டியில் “ஜி” பிரிவில் இடம் பெற்றுள்ளனது, இதில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுஉள்ளன \இப் போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடத்தப்படுகின்றன
மாவட்ட அணி அறிவிக்கப்பட்டு வீராங்கனைகள் வழியனுப்பும் விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, துணைச் செயலாளர் மாரியப்பன், உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி, முருகன், மற்றும் அமுல்ராஜ், ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் மாவட்ட அணி வீராங்கனைகளை மாவட்ட அணியின் பயிற்சியாளர் வேல்முருகன் மற்றும் மேலாளராக சமுத்திரக்கனி அணியின் தலைவராக செல்வராணி ஆகியோரை பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்

