கோடைகால சிறப்பு பண்புக்கல்வி , விளையாட்டு முகாம்

சேவாலயா தொண்டு நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் மேல்செய்தலை கிராமத்தில் அமைந்துள்ள வெள்ளையப்ப ரெட்டியார் ஆவுடைபார்வதி அம்மாள் நினைவு மையத்தில் 28 ஏப்ரல் முதல் 30 வரை பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு பண்புக்கல்வி மற்றும் விளையாட்டு முகாம், கிராம மக்களுக்கான இயற்கை மருத்துவ முகாமும் நடைபெற்றது. கீழஈரால் டான் பாஸ்கோ கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிரபு மற்றும் ஜெகவீரபாண்டியபுரம் ஊராட்சித் தலைவர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மருத்துவர்கள் மூவப்பன்,சுமங்கலி ஆகியோர் இயற்கை மருத்துவம் பற்றியும் ,இயற்கை உணவின் மருத்துவ பயன்கள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்து கூறினர்.
சேவாலயாவின் ஆதர்ச நாயகர்களான மகாகவி பாரதியார், மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் (பி ஜி வி) ஆகியோரின் வாழ்க்கை மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவது பற்றி சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் முரளிதரன் பேசினார்.

முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற பேராசிரியர் தங்கவேல்ச்சாமி, செயல் துறைத்தலைவர் கிங்ஸ்டன், பண்புக்கல்வி துறைத் தலைவர், காஞ்சனா, பி ஜி வி துறை ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், ஆலோசகர் ஆண்டனி லூர்துராஜ்,உடற்கல்வி ஆசிரியர் நிமல் யோகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

