பருத்தியில் தண்டுக்கூன் வண்டு தாக்குதலை கட்டுபடுத்துவது எப்படி ?
மானாவாரியாகவும் இறவையாகவும் பயிரிடபட்ட பருத்தியில் ஆங்காங்கு தண்டு கூன் வண்டு தாக்குதல் காணப்படுகிறது. பூவும் காயுமாக இருக்கும் செடிகள் வாடி ஒடிந்த விடும் நிலையில் இருப்பதை பார்த்து விவசாயிகள் வேதனை படுவதை பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
தண்டு கூன்வண்டு (STEM WEEVIL) இதனுடைய அறிவியல் பெயர் பெம்பெருல்ஸ் அபினிஸ்) இந்த தண்டுக்கூன் வண்டானது 3-5 மி.மீ அளவில் சிறிதாக கருப்பு நிறத்தில் இருக்கும்.இதனுடைய புழுக்கள் வெள்ளை நிறத்திலே இருக்கும் இவை துத்தி செடிகளில் அதிகமாக காணப்படும்.
பருத்தி செடியின் தண்டுபகுதியில் முதிர்ந்த வண்டானது முட்டையிடும்.வெளிவந்த புழுக்கள் பருத்தியின் தண்டினை குடைந்து உள்ளே இரண்டுமாதம்வரை இருக்கும்இறுதியில் 10நாட்களில் கூட்டுபுழுவாக மாறிபின்னர் முதிர்ந்த வண்டாக மாறும்.பருத்தி செடியின் வளர்ச்சி காலத்துலேயே இது 2-3தலைமுறை களை உருவாக்கும்.
தண்டின் திசுகளை உணவாக உட்கொள்ளுவதால் தண்டுபாகம் வலுவிழந்த காய்ந்து விடும் காற்று அடித்தால் கீழே சாய்ந்து விடும். தண்டுபகுதியில் முடிச்சு போன்று காணப்படும்.3-5மாதங்களில் கூட இதனுடைய தாக்குதல் இருக்கும்.இதனை சரியான முறையில் மேலாண்மை செய்தால் கட்டுப்படுத்திடலாம்.
* உழவுபோட்டு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்துவிடவேண்டும் பருத்தியை பார் முறையில் விதைத்தால் தான் எளிதாக தூர் யை ச்சுற்றி மண் அணைக்க முடியும்.
* மறுதாம்பு / கட்டைபருத்தியை விடக்கூடாது.
* பயிர்சுழற்சி முறையை கையாள வேண்டும்.( தானிய பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் )
* தண்டுகூன் வண்டு தாக்காத நோய் எதிர்ப்பு திறனுள்ள ரகங்களை (எம்.சி.யூ 3)போன்ற ரகங்களை தேர்வு செய்து விதைக்க வேண்டும்.
* விதைகளை பூச்சிக் கொல்லி மருந்து கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
* அதிகமாக தாக்குதல் தென்படும் இடங்களில் கார்போ பியூரான் குருணை மருந்தை விதைப்பதற்கு முன் 10கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் இடலாம்.இது முன்னெச்சரிக்கையாகும்.
*நடவு செய்த 20நாட்களுக்குள் செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும் அவ்வாறாக செய்வதால் முட்டையிடும் தண்டுபகுதி மறைக்க படும்.
* தாக்கப்பட்ட செடிகளின் தூர்கள் நன்றாக நனையும்படி குளோரிபைரிபாஸ் மருந்தை (லிட்டர் தண்ணீருக்கு 2.5மிலி) கலந்து தூர்பகுதியில் விதைத்த/ நட்ட 15, 30வது நாட்களில் தெளிக்க வேண்டும்
அல்லது பிப்ரோனில் 1மிலி மற்றும் லாம்டா சைக்ளோ திரின் 1மிலி கலந்து மண் ஈரமாக இருக்கும் போது தண்டுபகுதியில் ஊற்ற வேண்டும்.
இவ்வாறாக ஓருங்கிணந்த முறையில் நாம் செயல்பட்டால் எளிதாக பருத்தி தண்டு கூன் வண்டு தாக்குதலை கட்டுபடுத்திடலாம் இதனால் நாம் எதிர்பார்த்த பயிர் எண்ணிக்கையிலான செடிகளின் வாயிலாக எதிர்பார்த்த மகசூல் பருத்தி யை அறுவடைசெய்யலாம்.
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை