வேளாண்மையில் டிஜிட்டல் கிராப் சர்வே

 வேளாண்மையில் டிஜிட்டல் கிராப் சர்வே

நாடு முழுவதுமாக பல்வேறுதுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் வேளாண்மையில் இந்த டிஜிட்டல் புரட்சி தற்போது பயிர் சாகுபடி புல எண்கள் வாயிலாக கணக்கெடுப்பு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சகோதார துறை.( தோட்டக்கலை , வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் வேளாண் கல்லூரி மாணவர்களுடன்) இணைந்து தமிழகெங்கும் துரித மாக நடத்த பட்டு வருகிறது.

டிஜிட்டல் கிராப் சர்வே என்பது நிலத்தின் தன்மை மற்றும் பயிர் சாகுபடி விபரங்கள் ( தரிசு நிரந்தர தரிசு) விவசாயிகளின் கடன் மற்றும் காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் கணக்கெடுத்து இதற்கென உள்ள தனி செயலில் ( APP) தொகுத்து டிஜிட்டல் முறைக்கு மாற்றும் வகையில் தேசிய அளவில் வேளாண்மை அமைச்சகத்தின் கட்டுபாட்டில் நடந்து வருகிறது.ஓன்றிய அரசின் ஓருங்கிணந்த வேளாண்மை வளர்ச்சி திட்டங்களை வகுப்பதற்கு எதுவாக அனைத்து மாநிலங்களில் நில வகைபாடு நில அளவு சாகுபடி பரப்பு மற்றும் சாகுபடி பயிர் கள் பாசன வசதிகள் உட்பட அனைத்து விபரங்களும்.குறித்து இந்த கணக்கெடுப்பு நடத்த பட்டு வருகிறது.

இது போன்ற மாற்றத்திற்காக பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு கடந்த வருடம் செப்டம்பர் ௨ அன்று  மத்திய அரசின் பங்கு 1940 கோடி உட்பட 2.817 கோடியில் நிதி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளது

ம.பி கர்நாடகம் ஆந்திரா தெலுங்கானா தமிழகம் உள்ளிட்ட 12மாநிலங்களில் இந்த டிஜிட்டல் சர்வே நடத்த பட்டு வருகிறது

மாநிலம் முழுவதுமாக உள்ள கிராமங்கள் வாரியாக சர்வே எண் வாரியாக நிலங்களில் தமிழக அரசின் ( TAMIL NADU – E’- GOVERNANCE AGENGY) யால் அனுமதிக்க பட்ட ( CROP SURVEY) என்ற செயலி வாயிலாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் நடத்த பட்டு வருகிறது. மத்திய அரசின் அக்ரி ஸ்டாக்( AGRI STACK);யின் முன்முயற்சியை செயல்படுத்தும் பணியில் இந்த சர்வே உள்ளது.

கணக்கெடுப்பின் முன் முயற்சியானது கை முறை மதிப்பிடுகளை மின் அடங்கல் பதிவுகள் மூலம் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. நிலப்பதிவுடன் இணைக்கப்பட்ட விவசாயிகளின் தரவு மற்றும் துல்லியமான வெளியீட்டை கண்காணிப்பதற்காக புவிகுறிப்பிட்ட வரைபடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பயிர் கணக்கெடுப்பு செயலி யை ( APP) கையாளும் போது , அந்த செயலி நிலத்தின் சர்வே எண்ணை கிராம பெயருடன் காண்பிக்கும்.

இதனால் கணக்கெடுப்பாளர்கள் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள்,மதிப்பிடபட்ட அறுவடை நேரம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பற்றி விபரங்களைநிரப்ப செயலி அனுமதிக்கிறது.

இருப்பினும் தரைமட்டத்தில் திருத்தம் (CORRECTION) அல்லது புதுப்பிக்கும் வழி முறை இல்லை.இந்த செயலி நில அளவை மட்டுமே குறிக்கிறது.

 வேளாண்மையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மண் சார்ந்த விபரம் மற்றும் நம்பகமான தகவலை பெற்றிட இந்த சர்வே உதவுகிறது.

இது வேளாண்மையில் அடிப்படையாக புள்ளிவிபரங்களை வழங்க உதவும்.

இந்த டிஜிட்டல் சர்வே பணிதொகுப்பை விரைவாக ஓன்றிய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய  சூழ்நிலை யில் இந்த பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *