நெல் கொள் முதல் நிலையம் எப்படி செயல்படுகிறது?

 நெல் கொள் முதல் நிலையம் எப்படி செயல்படுகிறது?

தமிழகத்தில் விளைவிக்கப்பட்ட நெல்லை  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய, மத்திய  அரசின் பரவலான நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ்,தமிழக நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் சார்பாக நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.

கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கு என்ன விலை கிடைக்கிறது தெரியுமா ?

நடப்பு கொள்முதல் பருவத்தில் சன்னரக த்திற்கான ஊக்கத்தொகை ( INCENTIVES) 107ரூபாயில் இருந்து , 130ரூபாயாகவும் சாதாரண மோட்டா ரகத்திற்கான ஊக்கத்தொகை 82ரூபாயிலிருந்து , 105ரூபாயாகவும் உயர்த்த ப்பட்டு உள்ளது.

அதன்படி சன்னரக நெல்லுக்கு 2450எனவும் சாதாரண ரகத்திற்கு 2405என குவிண்டால் விலைநிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய படுகிறது.இதுவரை 5.52லட்சம்டன் நெல் கொள்முதல் செய்ய பட்டுள்ளன.

நெல்கொள்முதல் நிலைய பணிகள் ( DPC)

இப்பணிகளில் 8,281 பணியாளர்கள் மட்டுமின்றி 3448தூற்றும் இயந்திரங்கள் (WINNOWING MACHINE ) 3980ஈரப்பத சோதனை மானி கள்( MOISTURE METER ) மற்றும் எலெக்ட்ரானிக் தாரசு யும்பயன்படுத்த பட்டு வருகின்றன.

கொள்முதல் நிலையம் அமைக்க எவ்வளவு இடம் தேவை ?

குறைந்த பட்ச மாக 33சென்ட் நிலப்பரப்பும் உலர்களமும் சேமித்த வைக்க 100MT இடவசதியும் இருந்தால்கூட போதுமானது.

தேவையான சாக்கு ( பைகளும் ) கொள்முதல் நிலையத்தில் உள்ளது.

கொள்முதலுக்கான விலையாக இதுவரை 1313கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க பட்டுள்ளன என்பது கூடுதலான தகவலாகும்.

நெல் கொள்முதல் திறப்பது மற்றும் புகார் கள் தொடர்பாக விவசாயிகள் சென்னையில் உள்ள தகவல் உழவர்உதவிமையத்தை 1800599 3540என்ற கட்டணமில்லாத அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை கூறலாம்..

ஓழுங்கு விற்பனைக்கூடங்கள் வாயிலாக நெல் கொள்முதல் போன்று பயறுவகை( பாசிப்பயறு , உளுந்து) குறைந்த பட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய படுகிறது.

அக்ரி சு.சந்திர, சேகரன் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *