தென்னையில் ஊடுபயிராக பசுந்தாள் பயிர் சாகுபடி
தென்னை பயிரிடப்பட்ட நிலத்தின் மண்வளத்தை அதிகரிக்க நாம் கண்டிப்பாக ஊடுபயிராக பசுந்தாள் பயிரை பயிரிட்டு பூ பூப்பதற்கு முன் மடக்கி உழது மக்கிட செய்தால் மண்வளமும் மகசூல் ( தேங்காய்) உற்பத்தியும் அதிகரிக்கும்.மண்வளமாக இருந்தால் பொன் விளையும் என்பது நம்முடைய விவசாயிகளின் நம்பிக்கை.
தற்போதை நிலையில் கிராமப்புற ங்களில்கூட கால்நடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியதன் விளைவாக மண்வள மும் இரசாயன உரங்களின் பயன்பாட்டால் குறைந்து மலடாகி வருகிறதை நாம் இன்று கண்கூடாக பார்க்கிறோம்.அன்று அள்ளி கொடுத்த ( மகசூலை ) நிலம் இன்று கிள்ளிக் கொடுக்கிறது.அந்த வகை யில் மண்ணை வளப்படுத்தி, கரிம சத்துகளை அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்து பயன் பெறலாம்.
பசுந்தாள் உரசாகுபடி எப்படி செய்வது?
பசுந்தாள் சாகுபடியில் தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்ற உரபயிர்களை சாகுபடி செய்யலாம்.சணப்பு வின் அறிவியல் பெயர் குரோட்டலேரியா ஜன்சியா ,
சணப்பை ஏக்கருக்கு 20கிலோ விதை யை தென்னையில் ஊடுபயிராக விதைத்தால் நன்றாக முளைத்து வரும்.மிக வேகமாக வளரக்கூடிய பயிர்.7வாரத்தில் பூ பூக்க தொடங்கும்.இதனுடைய ஆழமான வேர் அமைப்பினால் , மண்ணுக்குள் நன்றாக ஊடுருவி மண்ணில் கட்டமைப்பை மாற்ற க்கூடியது.
இப்பயிரின் முக்கியத்துவம் என்ன?
இந்த பயிரில் வேர்களில் உள்ள வேர்முடிச்சுகளில் இருந்து ( ரைசோபியம்) வானில் உள்ள தழைசத்தை ( 78%N) காற்றிலுள்ள தழைசத்தை கிரகித்து தன்னுடைய வேர்மூடிச்சுகளில் சேமிக்க வைக்கும் ஆற்றல் உண்டு.
இந்த சணப்பை செடியை 7-8வாரங்களில் மடக்கி நன்றாக உழவு போட்டு மண்ணில் மக்க செய்தால் ஏக்கருக்கு 5.டன் அளவு தழைசத்தை மண்ணியில் சேர்க்கும்.அதுமட்டுமல்ல மண்ணின் இலைதழை களின் முலம் கரிம சத்துகளையும் சேர்ப்பதுடன் மண்ணில் கட்டமைப்பை ( களர் ) மாற்ற வல்லது.எக்கருக்கு 40முதல்50கிலோ தழைசத்து கிடைக்கும் ஓரு ஏக்கரில் ஊடுபயிராக சணப்பை சாகுபடி செய்தால்கிடைக்கும்.
இன்னும் சொல்ல போனால் சணப்பு விதைத்தால் தென்னந்தோப்புகளில் களைகளின் வளர்ச்சியும் தடுக்க படும்.தற்போதைய நிலையில் தேங்காய்விலை உயர்வாக உள்ள நிலையில் காய்களின் எண்ணிக்கை அதிகரிக்க வும் இந்த சணப்பு செடிஉதவுகிறது.
சணப்பில் உள்ள சத்துகள்.
NPKஉலர் நிலையில் உள்ள ஊட்டசத்துகள் ( % ) அளவில்
2.30: 0.50: 1.80
எனவே தென்னந்தோப்பில் களைகளை கட்டுப்படுத்த வும் மண்வள த்தை அதிகரிக்க வும் சணப்பை பயிரிடுவோம் .நிலத்தை வளப்படுத்துவோம்.சணப்பு சில இடங்களில் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுகிறதுஎன்பது கூடுதலான தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன் வேளாண்மை ஆலோசகர்.அருப்புக்கோட்டை.