நாளை மகா கந்த சஷ்டி தொடக்கம்; விரதம் இருப்பது எப்படி?

 நாளை மகா கந்த சஷ்டி தொடக்கம்; விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு மாதமும் சஷ்டி என்ற திதி வருகிறது. சஷ்டியில் விரதம் கடைபிடித்து முருகப்பெருமானை வழிபாடு செய்வதை நம்மில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறோம். இதில் ஐப்பசி மாதம் வரும் சஷ்டிக்கு மகா சஷ்டி எனப் பெயர். இதை நாம் கந்த சஷ்டி என்று குறிப்பிடுகிறோம்.

தீபாவளி பண்டிகைக்கு பிறகு வரக்கூடிய சஷ்டி திருநாளை எதிர்நோக்கி ஏராளமானோர் காத்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விரதம் இந்த கந்த சஷ்டி. மகா சஷ்டி விரதம் கடைபிடிப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்யாண வரன் அமையும், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோய் குணமாகும், படிப்பு, வேலை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். நம்பிக்கையோடு விரதம் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அப்பன் முருகன் நிச்சயம் பலன் தருவார்.

கந்த சஷ்டி விரத நாள் : நவம்பர் 2ஆம் தேதி (நாளை ) தொடங்குகிறது.

*ஒவ்வொரு முருக பக்தரும் தங்களுடைய உடல்நிலைக்கு ஏற்ப விரதம் கடைபிடிப்பது நல்லது. ஒரு வேளை உணவு சாப்பிட்டு இரண்டு வேளை பட்டினியாக இருக்கலாம்

*இரண்டு வேளை பட்டினியாக இருந்து ஒரு வேளை சாப்பிடலாம்

*மூன்று வேளையும் விரதம் கடைபிடித்தால் நெய் வேத்தியம் செய்த பால் மற்றும் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் சாப்பிடலாம்.

*சிலர் இளநீர் மட்டுமே குடித்து விரதம் கடைபிடிப்பார்கள். இளநீரின் வழுக்கையை சாப்பிடுவது தவறல்ல.

*7 விரத நாட்களிலும் மிளகு மட்டுமே சாப்பிடுவது கடுமையான விரதமாகும். முதல் நாளில் ஒரு மிளகு, அடுத்த நாளில் இரட்டிப்பு செய்து இரண்டு மிளகு என அடுத்தடுத்த நாட்களில் இரட்டிப்பு செய்து 7 நாட்களுக்கும் மிளகு மட்டுமே எடுப்பார்கள்.

*சிலர் உப்பு இல்லாத உணவாக தயிர் சாதம் மற்றும் பால் சாதம் மட்டுமே உட்கொள்வார்கள்.

*இன்னும் ஒரு சிலர் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டு அரிசி, பருப்பு தவிர்த்து விரதம் கடைபிடிப்பார்கள்.

*விரதத்தின் ஏழு நாட்களிலும் தண்ணீர் குடிக்கலாம். இதில் தவறு கிடையாது.

விரத காலத்தில் செய்யக் கூடாதவை

*விரத நாட்களில் காலை நேரத்தில் எக்காரணம் கொண்டும் தூங்க கூடாது.

விரதம் தொடங்குவது எப்படி?

*நவம்பர் 2ஆம் தேதி (இன்று)காலை சூரிய உதயத்திற்கு முன்பாக முருகப் பெருமானுக்கு பூஜை செய்து காப்பு கட்டி விரதத்தை தொடங்கவும்.

*விரதத்தின் 7 நாட்களுக்கும் முருகப் பெருமானுக்கு பூஜை செய்யுங்கள்.

*விரதத்தின் முதல் நாளில் அதிகாலை 4 மணிக்கு எழுந்து முருகப் பெருமானுக்கு பூஜை

*பெரியவர்களிடம் ஆசி வாங்கி விரதம் தொடங்கவும்.

*மஞ்சள் நூலை கைகளில் காப்பாக கட்டுங்கள்.

*முருகப்பெருமானுக்கு நெய் வேத்தியமாக காய்ச்சிய பால், தேன், வெற்றிலை வைத்து வழிபடவும்.

*விரதம் கடைபிடிப்பதை அனைவரிடமும் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. முடிந்தவரை பேச்சை குறைத்து 7 நாட்களுக்கும் உடலில் ஆற்றலை தக்க வைக்கவும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *