அந்தகன் (திரை விமர்சனம்)

இந்தியில் வெளிவந்த சூப்பர்ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் இந்த அந்தகன். ஒரு பாரில் பியானோ கலைஞராக வேலை பார்க்கும் பிரசாந்த், பார்வையற்றவராக நடிக்கிறார். ஏன் அப்படி நடிக்கிறார்? அந்த பாரில் அறிமுகமாகும் நடிகர் கார்த்திக், தன் மனைவியை சர்ப்ரைஸாக சந்தோஷப்படுத்த, அவளின் பிறந்த நாளன்று தன் வீட்டில் பியானோ வாசிக்க பிரசாந்திற்கு அழைப்பு விடுக்கிறார்.
பிரசாந்திற்கு அங்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்! கொன்றது மனைவி சிம்ரன். உடன் இருப்பது அவரது காதலன், இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி. பிரசாந்திற்கு உண்மையிலேயே கண் பார்வை இல்லை என்று நம்பிய சிம்ரன் அசால்ட்டாக எடுத்துக் கொள்கிறார். ஆனால் சமுத்திரக்கனிக்கு பிரசாந்த் மீது சந்தேகம். அவருக்கு உண்மையில் கண் பார்வை நன்றாக தெரியும் என்கிற உண்மை தெரியவர, படம் சூடு பிடிக்கிறது.
பிரசாந்திற்கு நடிக்கக் கிடைத்த நல்ல வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இருக்கிறார். அவர் அப்பா தியாகராஜன்தான் படத்தின் இயக்குனர். தயாரிப்பும் அவரே. மகனுக்காக மெனக்கெட்டது வீண் போகவில்லை.
சிம்ரன் வில்லியாக நடிப்பில் தூள் கிளம்பி இருக்கிறார்
கதாநாயகி ப்ரியா ஆனந்திற்கு அதிக வேலை இல்லை. சந்தோஷ் நாராயண் ரீரிக்கார்டிங்கில் கலக்குகிறார். பாடல்களில் சொதப்புகிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, ஊர்வசி என்று படம் முழுக்க நட்சத்திர பட்டாளம்!
ஒரு கொலையைச் சுற்றியே திரைக்கதை அமைக்கப் பட்டிருப்பதால், சில இடங்களில் அலுப்புத் தட்டினாலும் ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்
_கல்யாண்
