10 ம் தேதி ஐ.டி.ஐ. மாணவர் நேரடி சேர்க்கை; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

 10 ம் தேதி ஐ.டி.ஐ. மாணவர் நேரடி சேர்க்கை; கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர் மற்றும் நாகலாபுரம்; அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 24.5.2023 முதல் 20.6.2023 வரை மாணவர்களிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தற்போது ஐ.டி.ஐ. சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை ஐ.டி.ஐ. சேர்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் 10.7.2023 அன்று நடைபெறவிருக்கும் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம் என்று  மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். 

நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள விரும்புவோர் 8-ஆம் வகுப்பு ஃ பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் இரு நகல்களுடன் சேர விரும்பும் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம்.

மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் மாதந்தோறும் வருகைக்கேற்ப உதவித்தொகை ரூ.750ஃ- கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்கு தேவையான விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

எனவே இதுவரை ஐ.டி.ஐ.யில் விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நேரடியாக தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரலாம் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்  செந்தில்ராஜ்,தெரிவித்துள்ளார். 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *