எப்போதும் வென்றான், கயத்தார் பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையம்; தே.மு.தி.க. கோரிக்கை
![எப்போதும் வென்றான், கயத்தார் பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையம்; தே.மு.தி.க. கோரிக்கை](https://tn96news.com/wp-content/uploads/2023/07/db2f286f-2057-4450-b8e9-a3b3211e9688-850x560.jpeg)
தீயணைப்பு மாறும் மீட்பு பணிகள் தென்மண்டல உதவி துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் ராஜு. நிலைய அலுவலர் சுந்தராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் என்.சுப்பையா என்ற சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார கிராமம் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு தயார் செய்யும் தொழில் நகரம், கோவில்பட்டி குறுகலான தெருக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
எதிர்பாதவிதமாக தீவிபத்து ஏற்பட்டால் பெரிய அளவிலான தீயணைப்பு வாகனம் செல்வதற்குள் தீ முழுவதுமாக எரிந்து விடுகிறது, எனவே சிறிய தெருக்களில் செல்லும் வகையில் சிறிய ரக தீயணைப்பு வாகனம் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-2-1.jpg)
மேலும் அருகில் உள்ள எப்போதும் வென்றான் (30 கி.மீ.), கீழ ஈரால் பகுதி மற்றும் கயத்தார் (30 கி.மீ.),பகுதியில் தீப்பிடித்தால் கோ வில்பட்டியில் இருந்து தீயணைப்பு வாகனம் அங்கு செல்வதற்கு முன் அதிக அளவில் சேதம் ஏற்பட்டு விடுகிறது. எனவே எப்போதும் வென்றான், கயத்தார் பகுதிகளில் தீயணைப்பு நிலையம் புதிதாக ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)