கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டப்பணிகள் சரிவர செய்யவில்லை; அ.தி.மு.க. மீது நகரசபை தலைவர் குற்றச்சாட்டு

 கோவில்பட்டியில் 2-வது குடிநீர் திட்டப்பணிகள் சரிவர செய்யவில்லை; அ.தி.மு.க. மீது நகரசபை தலைவர் குற்றச்சாட்டு

கோவில்பட்டி நகரில் அ.தி.மு.க. சார்பில், திமுக நகராட்சியை கண்டித்து அதாவது கடந்த ஆட்சியில் ஒதுக்கிய தொகையில் சாலை பணிகளை நிறைவேற்றாமல் ரத்து செய்துவிட்டதாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்து வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் வகையில் நகரசபை தலைவர் கருணாநிதி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

 கோவில்பட்டி நகரசபையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாலைப்பணிகளுக்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கியதாகவும், அந்த பணியை சரியாக செல்லவில்லை என்றும் அ.தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் அந்த தொகை ஒதுக்கபட்டது, அது முழு மானியமாக வரவில்லை. முழுவதும் கடனாக வந்து இருக்கிறது. அந்த வேலையை உள்ளாட்சி தேர்தல் முடிந்து  நகரசபை தலைவர் பொறுப்பு ஏற்றபிறகு 137 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டன. இது உண்மை தான். இப்போது கோவில்பட்டி நகரசபையிலுள்ள 137 சாலைப்பணிகளில் 60 சாலைகளை சீரமைக்க மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதி வேலையையும் தர தயாராக இருக்கிறார்கள்.

அனால்  இந்த சாலை பணிகளை எங்களால் செய்ய முடியவில்லை. ஏனென்றால் 2-வது குடிநீர் திட்டப்பணிகள் சரியாக செய்து தரப்படவில்லை. வில்லை. அ.தி.மு.க.ஆட்சியில் வாங்கிய ரூ.31 கோடி கடனுக்கு, தற்போது வரக்கூடிய 15-வதுநிதிக்குழு தொகையை அப்படியே எடுத்து விடுகின்றனர். நகரசபை ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.12 கோடி வழங்க வேண்டிய நிலை உள்ளது. வரி வசூல் மூலம்  ரூ.6 கோடி தான் நகரசபைக்கு வருகிறது. மீதி தொகைக்கு நிதிக்குழுவில் வரும் பணத்தை வைத்து தான் சம்பளம் போடுகிறார்கள்.

நகரின் பல இடங்களில் இரண்டாவது குடிநீர் திட்ட குழாய் சரியாக பதிக்கவில்லை. இதை எல்லாம் இப்போது நாங்கள் சரி செய்து வருகிறோம், அ.தி.மு.க.வினர் குடிநீர் குழாயை முறையாக பதித்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. நகராட்சியில் நிதி கிடையாது. இது தெரிந்தும் அ.தி.மு.க. வினர் அரசியல் செய்கிறார்கள்.

தற்போது 2-வது குடிநீர் திட்ட குழாய்களை சரி செய்யும் பணிக்கு ஏற்கனவே ரூ.1 கோடி வரை செலவு செய்து இருக்கிறோம், இன்னும்  ரூ.2 கோடி தேவைப்படுகிறது. அதற்கு நகராட்சியில் நிதி இல்லை. எனவே, தொகுதி எம்.எல்.ஏ. கோவில்பட்டி நகரின் வளர்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்.

.பேட்டியின் போது தி.மு.க. நகர அவை தலைவர் முனியசாமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் உடனிருந்தனர்.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *