• May 9, 2024

ஒரு கைதி எப்படி அமைச்சராக  தொடர முடியும்? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

 ஒரு கைதி எப்படி அமைச்சராக  தொடர முடியும்? முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர்  நீக்கியுள்ளாரே

பதில் :_  ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது என்ன தெரிவித்தார்.தற்போது அவை அனைத்தும் சமூக ஊடகத்தில் வெளிவந்துகொண்டுள்ளது. செந்தில்பாலாஜியின் தம்பி தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். செந்தில்பாலாஜி ஊழலில் திளைத்துவருகிறார். அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார். தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்று உச்சநீதிமன்றம் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்.நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே குழுவை அமைத்து அதன் மூலம் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்கள். அதனை ஒட்டிதான் நடவடிக்கை இருந்துவருகிறது.இதில் எதுவும் அரசியல் கிடையாது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. அமலாக்கத்துறை கைது செய்து அதன் அடிப்படையில் கைது எண் அளிக்கப்பட்ட பிறகு,ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் தொடர முடியும். அதுதான் எங்களுடைய கேள்வி. அதன் அடிப்படையில் ஆளுநரிடம் நாங்கள் மனு அளித்தோம். எங்கள் ஆட்சி காலத்திலேயே நடந்த சம்பவங்களை முன்னுதாரணமாக  இருப்பதை தெரிவித்தோம். கருணாநிதி ஆட்சியில் என்.கே.பி,ராஜாவை நீக்கியுள்ளார்கள். அதுபோல நீக்கவேண்டும் என்று தெரிவித்தோம்.

ஒரு அமைச்சருக்கு எதற்கு இலாகா ஒதுக்கப்படுகிறது.இலாக்காவை கவனிப்பதற்குதான் அமைச்சர் பதவி அளிக்கப்படுகிறது. அந்த இலாகாவை கவனிக்கதான் கார்,பங்களா,ஊழியர்கள் ,உதவியாளர்கள்,பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இலாகாவே இல்லாத அமைச்சருக்கு எதற்கு மக்களின் வரிப்பணம் வீணாகவேண்டும்.இதுதான் கழகத்தின் கேள்வி. தற்போது குற்றம் சாட்டப்பட்டு,அவருக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு,கைதி எண் அளிக்கப்பட்டுள்ளது.இப்படி இருக்கும் நிலையில் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்கக்கூடாது என்றுதான் நாங்கள்  ஆளநரிடம் மனு அளித்தோம்.அவர் அதன் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று தெரிவித்தார். கழகத்தின் சார்பிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உச்சநீதிமன்றத்திலும்  மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினோம். அமைச்சர் பதவியை பாதுகாப்பு கவசமாக பயன்படுத்துகிறார்.உச்சநீதிமன்றம் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை.மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாத சூழ்நிலையில் அமைச்சராக இருப்பவர் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பார். அதற்கு வாய்ப்பு இல்லை. அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயம் இருக்கும்போது ஈடி என்ற வாள் தாக்கக்கூடாது என்பதற்காக இப்படி செய்கிறார்கள்.அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டிருந்தால் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும்.பல உண்மைகள் வெளி வராமல் போய்விடும். அவரை காப்பாற்றும் முயற்சியில் திமுக ஈடுப்பட்டுள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு. எது எப்படி இருந்தாலும் தார்மீக அடிப்படை என்று உள்ளது.இவ்வளவு தூரம் மல்லுக்கட்டிக்கொண்டு ஏன் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கவேண்டும்.இதுதான் மக்களுடைய கேள்வி. அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது,நீதிமன்றம் காவலில் உள்ளார்,சிறைவாசியாக இருக்கிறார்,அவர் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார். அதனால் அவரை நான் நீக்குகிறேன் என்று தெரிவித்துள்ளார். செந்தில்பாலாஜிக்கு சிறை எண் அளித்தபிறகு அவரை நீக்குவதில் என்ன பிரச்சனை உள்ளது. தமிழக மக்களின் கேள்வி என்ன.அமைச்சர் என்ற கேடயம் இருந்தால்  வாள் என்ற ஈடியை கேடயம் தடுக்கும். அவரை எப்படியாவது அமைச்சராக இருக்கவேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணம். நீங்கள்தானே சொன்னீர்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று.இப்போது நடவடிக்கை எடுக்கிறார்கள்.பாராட்டிவிட்டு போங்கள். அதனை விட்டுவிட்டு அன்றைக்கு ஒரு பேச்சு,இன்றைக்கு ஒரு பேச்சு  என்றால்  நாட்டு மக்கள் கேட்டுகொண்டே இருக்க  மாட்டார்கள். சட்டப்படி  அமைச்சராக நீடிப்பதற்கு எந்த தகுதியும் இல்லை.

கேள்வி : அமைச்சரை நீக்குவதற்கு கவர்னருக்கு  அதிகாரம் இல்லை என்று திமுக தரப்பினர் தெரிவித்துள்ளார்களே

பதில் :  சட்டப்பிரச்சனை நிறைய உள்ளது.இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் அனைத்தும் தெரிவிக்கப்படும். எங்கள் நிலை என்பது செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான். அதற்காகதான் போராட்டம் நடத்தினோம்.ஆளுநரிடம் மனு அளித்தோம். அதற்குதான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். யாருக்கு அதிகாரம் இருக்கும் என்பது நீதிமன்றத்தில் வரக்கூடிய விவகாரம். வழக்கு இருக்கிறது என்பது ஒரு புறம்.ஆனால் அவர்  நீதிமன்ற காவலில் இருக்கிறார். கைதி எண் அளித்தப்பிறகு எப்படி அமைச்சராக நீடிக்க முடியும். தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இது 365 பிரிவை நோக்கிதான் சென்றுகொண்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அசாதாரண சூழ்நிலைதான் நிலவுகிறது. ஊடகங்கள் மிரப்பட்டப்படுகிறது.தனி மனிதர்களுக்கு பாதுகாப்பு கிடையாது.கொலை,கொள்ளை,கற்பழிப்பு ,ஆள் கடத்தல்.பஞ்சாயத்து இவை அனைத்தும் சர்வ சாதாரணமாக நிலவுகிறது. உதாரணத்திற்கு தர்மபுரியில் ஒரே நாளில் மூன்று கொலைகள். வடசென்னையில் திருமண நிகழ்வில் கூலிபடையை கொண்டு துப்பாக்கியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை.கண்ணியமாக இருந்த காவல்துறை மிரட்டப்படும் சூழ்நிலை உள்ளது. காவல்துறையினர் அரிவாளால் வெட்டபடுவதும்  நடக்கிறது.பாதுகாப்பு அளிக்கவேண்டியவர்களுக்கு இந்த நிலைமை உள்ளது.

கேள்வி :- மாமன்னன் திரைப்படம் குறித்து,

பதில் :- நான் படமெல்லாம் பாக்குறது இல்லை, இது ஒரு ப்ளாப் ஆன படம். அந்த படம் குறித்து அவர்கள் பாராட்டிக்கொள்வார்கள்.ஐ.நா.சபையா பாராட்டிவிட்டது. திமுகவினர்தான் அந்த படத்தை பார்த்துவருகிறார்கள்.பொதுமக்கள் யாரும் பார்ப்பது கிடையாது. சமூக நீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி உள்ளதா. ஆதிதிராவிடர்களுக்கு அதிக முக்கியதுவம் அளித்த ஒரு கட்சி அதிமுக தான். பொது தொகுதியில் யாராவது ஆதிதிராவிடர்களை நிற்கவைப்பார்களா. அம்மா தைரியமாக நிற்கவைத்தார். தலித் எழில் மலையை நிற்கவைத்தார். திமுகவில் நிற்கவைக்கவில்லை.அப்படி என்றால் யார் சமூக நீதியை பின்பற்றுகிறார்கள். பராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக  ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த சரோஜாவை அம்மா நியமிக்கிறார்.யார் சமூக நீதியை நிலைநாட்டியது,அம்மாதான். தனபாலை பேரவை தலைவராக அம்மா நியமித்தார்.அவரை எப்படி எல்லாம்  கேவலப்படுத்தினார்கள். எப்படி எல்லாம் இம்சைப்படுத்தினார்கள். பேரவை தலைருக்கான புனித நாற்காலியில் தகுதி இல்லாவர்கள் எல்லாம் எப்படி அமர்ந்தார்கள். அருந்ததி சமூகத்தை சேர்ந்தவரை அசிங்கப்படுத்தினார்கள். ஸ்டாலின் பனியனை கிழித்துகொண்டு ஆளுநரை சென்று சந்திக்கிறார்.ஆட்சியை உடனே கலைக்கவேண்டும் என்று சொல்கிறார்.அப்போது எல்லாம் அவருக்கு ஆளுநர் தேவை. அப்போது 365 பிரிவை பயன்படுத்தவேண்டும் என்று சொல்வதற்கு வாய் இருந்தது. இப்போது 365 என்றால் கசக்கிறது. அதனால் சமூக நீதிக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது.தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சரின் செயல்பாடு மிக கேவலமாக உள்ளது.  அப்பா, மகன் ஒருவரை ஒருவரை பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *