தமிழ்ப் பேரரசு கட்சியினர் நூதன போராட்டம்
கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு தமிழ்ப் பேரரசு கட்சியினர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கழுதையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி திட்டங்குளம் பகுதியில் அரசிடம் முறையான அனுமதி பெறாமல், சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தனிநபர் ஒருவர் சந்தையினை அமைத்து நடத்தி வருகிறார். அந்த சந்தையை மூடுவதற்கு அரசு உயர் அதிகாரிகளும், நீதிமன்றமும் உத்தரவிட்டும் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அதை நிறைவேற்றாத தை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இவர்கல் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி பேனரில் வரையப்பட்டிருந்த கழுதையிடம் கொடுப்பது போல் நடித்து காட்டினர்.