கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா; நாளை நடக்கிறது
![கோவில்பட்டி காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா; நாளை நடக்கிறது](https://tn96news.com/wp-content/uploads/2023/06/cb720c7e-c133-45d2-802f-f8590af0e261-850x560.jpeg)
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் வருடாபிஷேக விழா நாளை 1-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது.
வருடாபிஷேக விழா 1-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி சங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை, வேதபாராயணம், சக்தி ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூல மந்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, மகாபிஷேகம் நடக்கிறது.
பின்னர் 8 மணிக்கு மேல் காளியம்மன் கோவில் விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்ப அபிஷேகம் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் தீப ஆராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படும்.
பகல் 11.30 மணி அளவில் கோவில் அருகில் ஈ.வே.அ.வள்ளிமுத்து நாடார் இளைஞர் அணியினரால் அன்னதானம் நடைபெறும்,
]
![](https://tn96news.com/wp-content/uploads/2023/06/school-admission-2-1.jpg)
இரவு 7 மணி அளவில் பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 8-வது நாள் மண்டகபடிதாரர் நாடார் மொத்த வியாபாரிகள் மண்டகபடிதாரர்கள் சார்பில அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் காளியம்மன் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடைபெறும்.
பூஜையை தூத்துக்குடி சிவா ஸ்ரீ செல்வம் பட்டர் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க திருக்கோவில் குழுவினர் செய்து வருகிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)