நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்: உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா உறுதி – டி.ஜெயக்குமார் பேட்டி
![நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்: உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி அமித்ஷா உறுதி – டி.ஜெயக்குமார் பேட்டி](https://tn96news.com/wp-content/uploads/2023/04/download-8-1.jpg)
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ராயபுரம் கிழக்கு மேற்கு திருவிக நகர் வடக்கு மற்றும் தெற்கு பகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் கழகத்தின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பூத் கமிட்டி வாரியாக நிர்வாகிகளுக்கு மகளிர் அணி மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுக்கு கையேடு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு.
கேள்வி : டெல்லி பயணம் குறித்து
பதில் : கழக பொதுச்செயலாளர் தெளிவாக சொல்லிவிட்டார்.தேசிய ஜனநாயக கூட்டணில் கழகம் அங்கம் வகிக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரையில் கழக கூட்டணியில் பாஜக அங்கம் வகிக்கிறது. கூட்டணி என்ற வகையில் கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சரை சந்தித்தோம்.தமிழகத்தில் இருக்கின்ற அசாதாரண சூழ்நிலை குறித்து பேசினோம். தமிழகத்தில் மினி எமர்ஜென்சி செயல்படுத்தப்படுகிறது.அதாவது பேச்சுரிமை இல்லை.கருத்து சுதந்திரம் இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கேடு.தற்போது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஒரு வாரத்திலே 10 கொலைகள் நடந்துள்ளது.வி.சி.க.பிரமுகர்கள் இரண்டுபேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். பாஜகவை சேர்ந்தவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு மணல் மாபியாக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள் என்பதற்கு விஏஓ படுகொலையை சான்று.இப்படி தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது.இதனையும் நாங்கள் உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.ஊடகத்திற்கும் பாதுகாப்பு இல்லாத நிலை. ஜி கெயர் நிறுவன ரெய்டு சம்பந்தமான செய்தி சேகரிக்க சென்றவர் அடி வாங்கியுள்ளார். ஜனநாயத்தில் நான்காவது தூணாக இருக்கின்ற உங்களுக்கே பாதுகாப்பு இல்லை.அதுமட்டுமல்லாமல் எங்கும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழலுக்கு உலகத்திலே கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுகதான்.அப்படி ஊழலை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி,கீழ் முதல் மேலே வரை ஊழல் செய்து கோடிக்கணக்கான பணத்தை வைத்துள்ளார்கள்.
சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் குறித்து மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்தி உள்ளோம். இவை அனைத்தும் சிபிஐ இதனை எடுத்து விசாரிக்க வேண்டும் . இதைப்பற்றி இதுவரையில் முதலமைச்சர் ம்வுனம் காப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்து உள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 அமைச்சர்கள் துறை வாரியாக ஊழல் செய்துள்ளார்கள். அதேபோல் தமிழக மின்துறை வாரியத்தில் இ.டி. செய்த விசாரணை கைப்பற்றப்பட்ட 366 கோடி பற்றி அதே போன்று ஜி ஸ்கொயர் உள்ளிட்டவை பட்டியல் முழுவதும் மத்திய அரசிடம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்கள்.
கேள்வி : கர்நாடகா சிவமோகா நகரில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தி கர்நாடக மாநில கீதத்தை பாட வைத்த பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. அண்ணாமலை முன்னிலையில் அரங்கேறிய சம்பவம் குறித்து
பதில் : இந்தியா என்பது ஒரு மொழிக்கு மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் . தமிழ் தாய் பாடலை பாதியில் நிறுத்தியது மிகவும் தவறானது ஒன்றும் .இதை நான் அண்ணாமலைக்காக மட்டும் சொல்லவில்லை இதனை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கேள்வி : ஓ.பன்னீர்செல்வம் நடத்திய மாநாடு குறித்து
பதில் : ஓபிஎஸ் அதிமுகவினரை தொடர்ந்து விமர்சிப்பது ஒரு நாகரிகமற்ற செயல். திருச்சியில் நடந்த அவர் நடத்திய மாநாடு இல்லை. அது ஒரு பொதுக்கூட்டம் . 50 கோடி ரூபாய் செலவு செய்து ஆள் பிடித்து கூட்டிய கூட்டத்தை வைத்துக்கொண்டு பொதுக்கூட்டம் நடத்தி தங்களைப் பற்றி அவன் இவன் என்று விரக்தியில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி : சமீபத்தில் பாஜக மாநில பொருளாளர் பேசியது குறித்து
பதில் : அண்ணாமலை தனது நிர்வாகிகளை கண்டித்து வைக்க வேண்டும் . ஆமாம் அவர்கள் ஒருவினை ஆற்றினால் நாங்கள் எதிர்வினை மாறுபட்ட கருத்து இல்லை என்றும் தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் சந்தித்து பேசிய பிறகும் போன்ற விமர்சனங்களை வைத்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)