• May 20, 2024

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் சாரண, சாரணியர் 3 நாள் பயிற்சி முகாம்

 கோவில்பட்டி  காமராஜ் மெட்ரிக் பள்ளியில் சாரண, சாரணியர் 3 நாள் பயிற்சி முகாம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேசன் பள்ளியில் சாரண சாரணியர்  3 நாட்கள் பயிற்சி  முகாம் நேற்று  27-ந்தேதி  காலை தொடங்கியது.       

உலக அளவிலான இளைஞர் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் திகழும் சாரணர் இயக்கமானது, நாளைய குடிமக்களான இளைய தலைமுறையினருக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கீழ்ப்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் இயக்கமாக திகழ்கிறது.. 

நாட்டுப்பற்று, இறைப்பற்று, அன்பு, கருணை, பணிவு, பிறருக்கு உதவி செய்தல், தன்னம்பிக்கை முதலான பண்புகளை சிறுவர்களிடத்தில் வளர்த்து அவர்களை சிறந்த குடிமக்களாக உயர்த்துவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும்.  

இவ்வியக்கம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல், கைவினைப் பொருட்களை செய்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் கவனம் செலுத்துகிறது.  சிறுவயதில், மாணவப் பருவத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் தன்னம்பிக்கையும், நற்பண்பும் மிக்கவர்களாக வளர்வதுடன், மற்றவர்களை சகோதரர்களாக மதிக்கும் மாண்புடையவர்களாக உயர்கிறார்கள்.

இயற்கை மற்றும் விலங்கு நேசம் கொண்டவர்களாகவும், நாட்டுப் பற்று மிக்கவர்களாகவும் இவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். எண்ணம், செயல், வாக்கு ஆகியவற்றில் தூய்மை கொண்டவர்களாகவும் இளைய தலைமுறையினரை மாற்றுகிறது சாரணர் இயக்கம்.இதனை நோக்கமாகக் கொண்ட இப்பயிற்சிக்கு கோவில்பட்டி கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்க செயலாளர் மோகன் மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட  பயிற்றுனர் செய்புகான்  ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்,

 இந் நிகழ்சிக்கு பள்ளிப் பொருளாளர் . ரத்தினராஜா தலைமை தாங்கி  பயிற்சியை தொடக்கி வைத்தார். பள்ளி குழு உறுப்பினர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்l.பிரபு  அனைவரையும் வரவேற்றார்.

இப்பயிற்சியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் 41 பேர் மற்றும் புனிதஓம் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர் 19 பேர்  மற்றும் பள்ளியின் சாராண சாரணிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சாராண சாரணிய ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.

இந்த பயிற்சி முகாம் நாளை முடிவடைகிறது,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *