• May 20, 2024

தனியார் கலைகல்லூரி மாணவர் சேர்க்கை: 1 -ந்தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

 தனியார் கலைகல்லூரி மாணவர் சேர்க்கை: 1 -ந்தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

தமிழகத்தில் மொத்தம் 633 சுயநிதி தனியார் மற்றும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன, இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப வினியோகம் தொடங்கலாம் எனவும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 13  தொடங்கி ஏப்.3 வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவா்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தோ்வா்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்திருந்தனா்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி மதிப்பெண் சான்றிதழ்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *