கந்துவட்டி தொழிலை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை; அரசுக்கு கோரிக்கை
கோவில்பட்டி கோட்டாட்சியர் ம மகாலட்சுமியை வக்கீல் அய்யலுசாமி சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் சட்டதிருத்தம் செய்யவேண்டும். கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.
*.கந்துவட்டி தொழில் செய்யும் நபர்கள், மிகப் பெரிய குற்றபின்னணி கொண்ட நபர்கள் ஆகவே கந்துவட்டி புகார் வந்தவுடன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.
*.கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களின் காசோலை புரோநோட்டுகள் மற்றும் கந்துவட்டி தொழில் செய்யும் மாபியாக்கள் சட்டவிரோதமாக மிரட்டி, கைப்பற்றி வைத்து உள்ள வீடுகள், காலிமனைகள், மற்றும் வீட்டு உபயோகபொருள்கள் , பத்திரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் (இதில் அதிகம் கையெழுத்து மட்டுமே பெறப்பட்ட வெற்று காசோலைகள் மற்றும் புரோநோட்டுகள் மிக மிக அதிகம் ) மற்றும் கைப்பற்ற மாவட்ட அளவில் சிறப்பு படைகள் அமைத்து கைப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*. கந்து வட்டி வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விரைவான நீதிகிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
*.கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு மற்றும் கந்துவட்டி தொழிலுக்கு எதிராக போராடும் வழக்கறிஞர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
*.கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்கொலை செய்து கொண்டால் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் .
*.கந்து வட்டி தொழிலுக்கு எதிராக புகார் அளிக்க டோல்ப்ரி நம்பரை தமிழகம் முழுவதும் காவல்துறை ஏற்படுத்த வேண்டும்
*.,கந்துவட்டி தொழில் செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டதிருத்தம் செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு காரணமாக நபர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
*.தமிழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் பதியப்பட்டுள்ள கந்துவட்டி வழக்கு விபரம் அதில் தண்டனை பெற்று தந்த விபரம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தமிழக அரசு,
*., தமிழகம் முழுவதும் கந்துவட்டி புகார்களை விசாரணை செய்ய மாவட்டம் தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கூடுதல் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக இருந்து மாவட்ட காவல் கண்ணானிப்பாளர் அலுவலகத்தில் வைத்து கந்துவட்டி புகார்களை விசாரணை செய்து கால தாமதம் செய்யாமல் உடனே கந்துவட்டி மாபியாக்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
*..கந்துவட்டி மாபியாக்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக நெட்வொர்க் அமைத்து செயல்படுகிறார்கள் அவர்களை காவல்துறை உளவு பிரிவு மூலம் தகவல்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
*.தமிழக அரசு கந்துவட்டி தொழிலை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*. கந்துவட்டி குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும்.
மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.