தூத்துக்குடி புத்தக திருவிழா: கரிசல் இலக்கிய கவிதைகள் உரை
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் தூத்துக்குடி – எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி சாலை பிரிவு அருகில் உள்ள மைதானத்தில் 4-வது புத்தகத் திருவிழா ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.
புத்தகத் திருவிழாவின் ஆறாம் நாளான (26/4/2023) நேற்று நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் சோ. தர்மன், கவிஞர் தேவதேவன், உள்ளிட்டோர் கரிசல் இலக்கியம், கவிதைகள் குறித்து உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.