• May 20, 2024

திருவண்ணாமலை கிரிவலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 திருவண்ணாமலை கிரிவலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் கடைப்பிடிக்கும் வழிமுறை பலன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

திருவன்னாமளியில் எங்காவது கிரிவலம்  துவங்கி எப்படியாவது முடிக்ககூடாது மலையை சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது… இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும்.

பலர் இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் ஒரு  சிலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு. அது சாத்தியமில்லாது போது நடந்து சென்றாலே போதும். எல்லா மாதங்களும் கிரி வலத்திற்கு ஏற்ற மாதங்களான போதும் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பவுர்ணமி காலங்கள் மலை வலத்திற்கு ஏற்ற காலங்களும், மாதங்களுமாகும்.

மலை வலம் வரும்போது அருணாசலேஸ்வரின் கிழக்கு கோபுரத்தில் துவக்கி முடிக்கும் போது அருணாசலேஸ்வரரை வணங்கினால் தான் மலைவலம் முடித்தாக அர்த்தம். அருணாசலேஸ்வரரின் கிழக்கு வாயிலில் இருந்து மலை வலம் வர ஆரம்பிக்க வேண்டும். மலையின் எட்டு திசைகளிலும் தன் பாவங்களை போக்குவதற்காக அஷ்டதிக்கு பாலகர்களில் கிழக்கு அதிபதியான இந்திரன் வழிபட்ட இந்திரலிங்கத்தை வழிபடவேண்டும். பிறகு மலை சுற்றும் சாலையில் நந்திகேசுவரர் சன்னதி உண்டு. இங்கு வணங்கி வழிபட்டு தான் மலைவலம் வரவேண்டும். ஏனெனில் மலை சுற்றுகையில் நமக்கு சிவன் அளித்த அதிகார மூர்த்தி அவர். அடுத்து தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி பூஜை செய்த அக்னி லிங்கம் உள்ளது. இதன் அருகில் சிம்ம தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தின் கரையில் அரிச்சந்திர மகாராஜாவின் சிலை ஒன்றும் உள்ளது. அதன் வழியே சென்றால் பிருங்கி மகரிஷி முனிவரின் வழிபாட்டு தலம் உள்ளது. அடுத்து தெற்கு திசைக்கு அதிபதி எமன் பூஜை செய்து வழிப்பட்டு எமலிங்கம் உள்ளது.

எமன் கட்டளை நிறைவேற்றும் கின்னர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற ஐதீகம் உள்ளது. இங்கு தியானம் செய்தால் நம்மிடையே உள்ள தீய எண்ணங்கள் மறையும் நினைக்கின்ற செயல்கள் நிறைவேறும்.

அடுத்து மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மஞ்சள் கயிற்றில் தொட்டில் செய்து அங்குள்ள மரத்தில் தொங்குவதை காணலாம். இந்த மரத்தில் அங்ஙனம் கட்டினால் குழந்தை வரம் அளிப்பதாக கூறப்படுகிறது.

தென்மேற்கு திசைக்கு அதிபதியான நிருதி சிவனை வழிப்பட்ட நிருதி லிங்கம் உள்ளது. இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை பார்க்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் நந்தியின் தலை திரும்பி நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதை வணங்கி செல்ல வேண்டும்.

அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உண்டு. இங்கு உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் அருகிலேயே உள்ளது. ஆஞ்சனேயர் சன்னதி, ராகவேந்திரா ஆலயம், முருகன் ஆலயம் உள்ளது. இங்குள்ள முருகன் சிலை பழநி மலை சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்டது. பழநியில் நவபாஷாண சிலை அமைத்த போகர் இங்கு மூலிகைகளால் சிலை அமைத்தார் (இந்த சிலை நவாப்புகள் காலத்தில் திருட்டு போய்விட்டது) அடுத்து இராஜராஜேஸ்வரி ஆலயம் புதுப்பித்து புத்தொளியுடன் இருக்கிறது. இராஜராஜேஸ்வரி ஆலயத்திற்கு நேர் எதிரில் மலை அடிவாரத்தில் கண்ணப்பர் கோயில் அமைதியான சூழ்நிலையில் குளிர் மரங்களுக்கு இடையில் இருக்கிறது.

தியானத்திற்கு ஏற்ற இடம். சாதுக்களும், ஆங்கிலேயரும் இங்கு தியானத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இராஜராஜேஸ்வரி ஆலயம் அடுத்து, கவுதம மகரிஷி கோயில் இருக்கிறது. கவுதம மகரிஷி இங்கு வந்து வழிபாடும், நிஷ்டையிலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. அடுத்து சூரியன் வழிபட்ட லிங்கம். மேற்கு திசைக்கு அதிபரான வருணன் வழிபட்ட லிங்கம் உள்ளது.

அதன் பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். அருகில் மாணிக்க வாசகர் கோயில் உள்ளது. அகஸ்தியர் குளம் உள்ளது. அதற்கடுத்து வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயு லிங்கம் உள்ளது. சிறிது தூரம் சென்றால் வட திசைக்கு அதிபதியான குபேரன் வழிபட்ட குபேரன் லிங்கம் உண்டு.

அடுத்து இடுக்கி பிள்ளையார் கோயில் உள்ளது. இதனை கோயில் என்று சொல்லுவதை விட சுளுக்கும், உடல் வலி தீர்க்கும் இடம் எனலாம். முன்காலத்தில் கடவுளின் பெயரை கூறி பக்தியும், ஒழுக்கத்தினை வளர்த்தார்கள். அதே போல் இதுவும் ஒன்று. இந்த கோயிலில் நுழைத்து ஒருக்களித்து வெளியே வரவேண்டும். ஒரு அடி அகலத்தில் உடம்பை ஒருகளித்த படி வரவேண்டும்.

அப்படி இல்லை என்றால் உடம்பு சிக்கி கொள்ளும். அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.. அப்போது உடம்பில் ஏதாவது சுளுக்கு, வலி இருந்தால் விலகிவிடும். ஆனால், உடம்பு மாட்டிக் கொள்ளாமல் வெளியே வரவேண்டும் என்ற் எண்ணத்தில அங்குள்ள பிள்ளையாரை தரிசிக்க எண்ணம் வருவதில்லை. அதனால் தான் அய்ம்பூதங்களையும் அடக்கினால் தான் வாழ்வில் உயர்வடைய முடியும் என்ற ஒப்பற்ற தத்துவத்தை இடுக்கு பிள்ளையார் காட்டுகிறார்.

இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் வட கிழக்கு அதிபாரான ஈசானன் வழிபட்ட ஈசான லிங்கம் உள்ளது. இதனையும் வழிபட்டு அதன் பிறகு அருணாசலேஸ்வரர் கோயில் சென்று தரிசித்த பிறகுதான் மலைவலம் பூர்ணத்துவம் அடைகிறது. எல்லா தீர்த்தங்களிலும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்றாலும், துர்க்கையம்மன் கோயிலுக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது.மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் (கட்கம் என்றால் வாள்) வீசி தோற்றுவித்தது.

மலை வலம் வர சிறந்த, சிறப்பான நாள்:

புராண காலத்தில் பார்வதி தேவியார் சிவனின் இடப்பாகம் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் விழா எடுத்து மலையை வலம் வந்தார். அப்போதுதான் சிவன் காட்சி தந்து உமையாளுக்கு இடப்பாகம் அளித்தார் என்பது வரலாறு. சித்தர்கள், ஞானிகள் ஆகியோர் ஒவ்வொரு மாதப்பிறப்பு மற்றும் பிரதோஷ காலத்தில் மலை வலம் வந்தனர்.

அதன் பின்னர் பவுர்ணமி அன்று மலைவலம் வர ஆரம்பித்தார்கள். சந்திரன் நம் மனத்துக்கு (எண்ணத்திற்கும்) காரகன். அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்களை தருகிறார். இதனால் பெளர்ணமி மலை வலம் வருவது சாலச்சிறந்தது என பெரியோர்களால் போற்றப்பட்டது. மனோன்மணியான சக்தி சிவனுடன் இரண்டற கலக்கும் இந்த நாளில் வழிபடும் பக்தர்களுக்கு விசேஷ சக்திகளை வழங்குகிறது என முனிவர்கள் கூறுகின்றனர்.

இதை விஞ்ஞானமும் உறுதிபடுத்துகிறது.இதை விட அதிசூட்சம் நாளாக வியாதீபாத யோக நாள் அன்று மலை வலம் வந்தால் நினைத்த காரியம் சித்தி அடையும் என்று கோயில் குருக்கள் கூறுகின்றனர்.

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமையாக இருக்கும். ஆனால், திரு அண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை.அக்னிக்குரிய கிரகம் அங்காரகன். ஆகவே இந்த கோயிலில் மட்டுமே சிவ பெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும். அதுபோலவே செவ்வாய்க்கிழமை அன்று வழிபடுவோர் பிறவி பிணியிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது.

மலை வலத்தினால் கிடைக்கும் நன்மைகள்:

ஆயுளைக்கூட்டும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித்தொல்லையில் இருந்து விடுப்பது திருநள்ளாறு. நோய்களில் இருந்து நம்மை காப்பது வைத்தீஸ்வரன் கோயில். அது போல் ஊழ்வினைகளை நீக்கக்கூடியது அண்ணாமலையார் கோயில். பிறவிப்பிணி நீங்க வேண்டும் என விரும்பும் எவரும் மலை வலம் வருவதால் தத்தம் கர்மாவை குறைத்து கொள்ள முடியும். அண்ணாமலையை சுற்றி வருவது சம்சாரக்கடலை கடக்கும் தெப்பமாக அமையும். அதுபோல் ஏழு நகரங்களையும் கடந்து முக்தி அடையும் ஏணியம்மன் கோயிக்குள் கட்க தீர்த்தம் மிகச்சிறந்த தீர்த்தமாக போற்றப்படுகிறது. மகிடாசுரனை வதம் செய்த பார்வதி தேவியின் பாபம் போக்குவதற்கு துர்க்கையம்மன் வாள் வீசி தோற்றுவித்தது.

மலை சுற்றி வரவேண்டும் என நினைத்து ஓரடி எடுத்து வைப்பவர்களுக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டாம் அடி எடுத்து வைத்தால் ராஜிய யாகம் செய்த பலன் கிடைக்கும் மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நான்காவது அடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களும் பலன் கிடைக்கும். நினைப்பவர்களுக்கே இந்த பலன் என்றால் மலை சுற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன் கைலாசத்திற்குள், நுழைந்து பிறப்பு இறப்பாகிய பிணி நீங்கி உயர் பதவி கிடைக்கபெறுவார்கள் என்று அருணாசல் புராணம் தெரிவிக்கிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. இன்று படுக்கும் போது நாளை காலையில் எழுந்து விடுவோம்

என்ற திட நம்பிக்கையில்தான் துயில் கொள்கிறோம். நம்பிக்கைதான் நமது உயிர் மூச்சு. நம்பிக்கையால்தான் எல்லாவற்றியும் சாதிக்கிறோம். நம்பிக்கை இல்லாதவர் இந்த உலகில் வெற்றி பெற முடியாது. எனவே பூரணமான நம்பிக்கையோடு தொடங்குங்கள். மலையை சுற்றும் போது சிவலிங்கம், சிவன், சிவம் என்ற எண்ணத்தோடு வலம் வர தொடங்கினால், நீங்கள் நினைத்த எண்ணங்கள் கண்டிப்பாக நிறைவேறும்

ஞாயிற்று கிழமை சுற்றினால் சிவபதவி கிடைக்கும்.

திங்கள் கிழமை சுற்றினால் இந்திர பதவி கிடைக்கும்.

செவ்வாய் கிழமை சுற்றினால் கடன்,வறுமை நீங்கும். தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளை நீக்கி சுபிட்சும் பெறலாம்.

புதன்கிழமை சுற்றினால் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் கிடைக்கும்.

வியாழக்கிழமை சுற்றினால் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம்.

வெள்ளிக்கிழமை சுற்றினால் விஷ்ணு பதம் அடையலாம்..

சனிக்கிழமை சுற்றினால் நவக்கிரகங்களை வழிப்பட்டதன் பயன் கிடைக்கும்.

நாற்பத்தெட்டு நாட்கள் அதிகாலையில் கணவனும், மனைவியும் நீராடி

மலைவலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.

அமாவாசை அன்று சுற்றினால் மனதில் உள்ள கவலைகள் போகும்.

மனம் நிம்மதி அடையும்.

மலை வலம் வரும் போது பக்தர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

என்பதை அருணாசல புராணத்தில் பிரம்மன் தெரிவிக்கிறார்.

மலை வலம் வரும் பக்தர்கள் அன்றைக்கு பெண்களை நினையாமலும், அவர்களோடு சேராமலும், நீரில் மூழ்கி, தூய்மையான ஆடையை உடுத்திகொண்டு விபூதி அணிந்து, தானம் தாம் கொடுத்து ஒருவரிடத்தும் தானம் வாங்காமல் காலினால் நடந்து வரவேண்டும். மலையை சுற்றி இருக்கின்ற தேவர்களையும் முனிவர்களையும் வணங்கி சட்டையும், போர்வையும் நீக்கி குடை பிடியாமல், செருப்பு அணிப்பணியாமல்,பயம், கோபம், சோகம், இவற்றை நீக்கி குதிரை, யானை இவற்றின் மீது ஏறாமல் தாம்பூலம் தரிக்காமல், சிந்தையை சிவன்பால் செலுத்தி வலம் வரவேண்டும். கையை வீசிக்கொண்டுபோகாமலும், மனச் சோர்வில்லாமல்,  ஆர்வத்தோடு கைகளை தலை மேல் குவித்து கொண்டு, தீயவர்களை கண் எடுத்தும் பாராமல் நடத்தல் வேண்டும். மலை சுற்றப்போகும் பக்தர்களை பரிசோதிக்க நினைப்பது இறைவனின் தினசரி விளையாட்டு. எனவே இச்சோதனைகளை வென்று மலை வலம் வரவேண்டும்.

சமாதி அடைந்த சித்தர்களின் சக்தி:

நம் மனதில் கோபம், க்ரோஷம், குழப்பம், கவலை ஆகியவை எழும் போது நம் உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு மேல் இருக்கும். இதனை பீட்டா அலைகள் என கூறுகின்றனர். நம் ஓய்வெடுக்கும் போது (ஆழ்ந்த தூக்கத்தின் போது) உடலை சுற்றி உள்ள அலைகள் 14 ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அந்த அலைகளை ஆல்ஃபா அலைகள் என கூறுகின்றனர். அதே உடல் தியான நிலையில் இருக்கும் போது எட்டு ஹெர்ட்ஸ்க்கு கீழே இருக்கும். அதை தீட்டா அலைகள் என்கிறனர் விஞ்ஞானிகள்.

தவ நிலையில் உள்ள சித்தர்களின் உடலில் இருந்து இந்த அலைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். மிகப் பிரசித்தமான கோயில் சித்தர்கள் சமாதி அடைந்திருக்கும் மர்மம் இதுதான்…

அண்ணாமலையில் வாழ்ந்து முக்தி பெற்ற மகான்கள்

குகை நமச்சிவாய தேவர்

குகை நமச்சிவாய சுவாமிகள்

அருணகிரி நாதர்

திருவண்ணாமலை தின நுமுதல் குருமூர்த்தி

தேசிகப் பரமாசாரிய சுவாமி

பாணி பத்திர சுவாமி

அன்னை மங்கையர்க்கரசியார்

சோணாசல் தேவர்

ஞானப்பிரகாசர்

வீர வைராக்கிய மூர்த்தி சுவாமி

அப்பைய தீட்சிதர்

சிவப்பிரகாசர்

ஞானியாரடிகள்

தட்சிணாமூர்த்தி சுவாமி

குமாரசாமி பண்டாரம்

அழியாவிரதம் கொண்ட தம்பிரான்

ஈசானிய ஞான தேசிகர்

சற்குரு சுவாமி

பழனி சுவாமி

அருள்மொழி அம்மணி அம்மாள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி

காரியானூர் நடேச சுவாமி

அங்கப்பிரதட்சணம் அண்ணாமலி சுவாமி

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமி

சிவா சுவாமி

பத்திராசல சுவாமி

சேஷாத்திரி சுவாமி

ரமண முனிவர்

சடைச்சி அம்மாள்

அழகானந்த அடிகளார்

இரை சுவாமி

இசக்கி சுவாமி

சோணசால பாரதியார்

யோகி ராம்சுரத் குமார் [விசிறி சாமியார்].

இன்னும் பல மகான்கள் சித்தர்கள் யோகிகள் அருரூபமாக அருளாசி வழங்குகிறார்கள்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *