• May 20, 2024

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ரெயில்கள் நிற்காது

 தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மேலும் ஒரு மாதம்  ரெயில்கள் நிற்காது

மதுரை- தூத்துக்குடி இடையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரெயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையமானது புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரெயில்கள் நின்று செல்லும் வகையில் மேலூர் ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

இதனால் ரெயில் பாதை பணியை இந்த மாத இறுதிக்குள் முடித்து ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த புதிய ரெயில் வழித்தடத்தில் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பணிகளை விரைவுப்படுத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு ரெயில்கள் நின்று செல்லாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட இயக்க மேலாளர் ஜோசப் மேத்யூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருவதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் விரைவு ரயில், மைசூரில் இருந்து தூத்துக்குடி வரும் ரெயில், நெல்லை முதல் தூத்துக்குடி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் வருகிற 30-ந் தேதி வரை மேலூர் ரெயில் நிலையத்தில் நிற்காது என்று தெரிவித்து உள்ளார்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *